Thursday, December 22, 2011

கிரிக்கெட் வீரர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் பாரத் ரத்னா விருது வழங்குவது வேடிக்கை: நீதிபதி மார்கண்டேய கட்ஜு

நீதிபதி மார்கண்டேய கட்ஜு
புது டில்லி: சமூக முன்னேற்றத்திற்கு அப்பாற்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் பாரத் ரத்னா விருது வழங்கப்படுவது வேடிக்கையானது என்று  பத்திரிக்கை சபை தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் பாரத் ரத்னா விருது வழங்கப்படுவது குறித்து மக்களும் பேசிக்கொள்கிறார்கள். இது நாம் மூழ்கிக் கொண்டிருக்கும் தரம் தாழ்ந்த கலாசாரத்தைக் காட்டுகிறது. நம்முடைய உண்மையான வீரர்களைப்பற்றி கண்டுகொள்வதில்லை. மாறாக, வீரர்கள் போன்று காட்சி அளிப்பவர்களை ஆரவாரத்தோடு பாராட்டுகிறோம். மட்டை பந்து வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும், ஹாக்கி வீரர் தியான் சந்த்-க்கும் விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படுவதைக் குறித்து தனது கருத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார்.

இன்று நம் நாடு நாற்சந்தியில் நிற்கிறது. நாட்டிற்கு நல்வழிகாட்டி முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் நபர்கள் தேவைப்படுகிறார்கள். இது போன்ற நபர்களுக்குத் தான் பாரத் ரத்னா விருது வழங்கப்பட வேண்டும், ஒருவேளை அவர்கள் இறந்திருந்தாலும் கூட.

சமூக முன்னேற்றத்திற்கு அப்பாற்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் பாரத் ரத்னா விருது வழங்கப்படுவது விருதை பரிகசிக்கும் செயலாகும்.

மிர்சா காலிப் மற்றும் சரத் சந்திர சட்டோபாத்யாய போன்றோர்களுக்கு பாரத் ரத்னா விருது வழங்கப் படவேண்டும் என்ற கோரிக்கையை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் விமர்சிக்கப்படுகிறேன்.

தகுதியான நபர்களுக்கு அவர்கள் இறந்திருந்தாலும் கூட விருது வழங்குவதில் தவறேதுமில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். உ.ம்: சர்தார் படேல், Dr.அம்பேத்கர்.

மிர்சா காலிப் பண்டைய உர்து கவிஞர். சரத் சந்திர சட்டோபாத்யாய ஜாதிமுறையையும், மூடப் பழக்க வழக்கங்களையும், பெண்ணடிமைத் தனத்தையும், நிலப் பிரபுத்துவ சமூகத்தையும் தொடர்ந்து எதிர்த்து வந்தவர்.

டெல்லியில் ஏப்ரல் 2011-இல் நடைபெற்ற ஜஸ்ன்-எ-பஹார் முஷைரா என்ற நிகழ்ச்சியில் நான் முதல் முதலாக இந்த வேண்டுகோளை விடுத்த போது, அதனை மக்களவை தலைவர் மீரா குமார், மத்திய அமைச்சர் சல்மான் குர்சித், தலைமை தேர்தல் கமிசனர் S Y குரேஷி ஆகியோர் வரவேற்றனர் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறினார்.

தற்போதைய தலைமுறை இந்தியர்கள் பெரும்பாலும் கலாச்சாரத்தை விட்டு விலகி வருகின்றனர். அவர்களின் கவனம் எல்லாம் பணம், திரைப்பட நட்சத்திரங்கள், கிரிக்கெட், மேலோட்டமான தலைவர்கள் ஆகியவற்றின் மீது தான் என்பதை சுட்டிக்காட்டுவதற்கு வருத்தப்படுகிறேன். தமிழ் கவிஞர் சுப்ரமணிய பாரதிக்கும் பாரத் ரத்னா விருது வழங்கப் படவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறினார் கட்ஜு.

நன்றி: T O I 
 

Wednesday, September 28, 2011

தான் ஒரு தீவிரவாதி என்பதை மறைக்க உண்ணாவிரத நாடகம்! சங்கர் சிங் வகேலா !!

ஆமதாபாத் : மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று நாள் உண்ணாவிரதம் முடித்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சங்கர் சிங் வகேலா, மாதவடியா ஆகியோர், திரளான தொண்டர்களுடன், ஆமதாபாத்தில் சபர்மதி ஆசிரமம் அருகேயுள்ள நடைபாதையில் இவர் மோடியை விட இரண்டு மணி நேரம் அதிகமாக இருந்து உண்ணாவிரதம் இருந்து முடிதுள்ளார். 
அப்போது செய்தியாளர்களிடம் வகேலா கூறியதாவது; ‘குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் உள்ள வசதிகளுடன், உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார். அவரது இமேஜை அதிகரித்துக் கொள்வதற்காக, தான் ஒரு தீவிரவாதி என்பதை மறைக்க இந்த உண்ணாவிரத நாடகத்தை அவர் அரங்கேற்றுகிறார்.
இப்போது, குஜராத்தில் உண்ணாவிரதம் இருக்க வேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது. வானத்தில் உள்ள சொர்க்கம், குஜராத்தில் தரை இறங்கிவிட்டதா? குஜராத் மதக் கலவர வழக்கில் நரேந்திர மோடியை விசாரிப்பது குறித்து கீழ் நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இன்னும் அந்த வழக்கு முடியவே இல்லையே. உண்ணாவிரததின் மூலம் தன்னை நிரபராதி என காட்ட முயற்சிதுள்ளார்.
இந்த உண்ணாவிரதத்துக்காக, பொதுமக்களின் வரிப் பணத்தைச் செலவிட வேண்டிய அவசியம் என்ன? மேலும் 3000 க்கும் அதிகமான முஸ்லிம்களை கொன்று விட்டு இப்பொழுது இல்லை என்று மத சார்பு நாடகம் ஆடுகிறார். இவை அனைத்துமே ஏமாற்று வேலை.
குஜராத்துக்கு தொழி்ல் தொடங்க வரும் தொழிலதிபர்களை, நரேந்திர மோடி பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்று கூறுமாறு  நிர்பந்திக்கப்படுவதாகவும், மோடி ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், மேலும் நான் தான்  உண்மையான் காந்தியவாதி, நான் எந்த அரசியளுக்க்காகவும் உண்ணாவிரதம் இருக்கவில்லை. மக்களின் நலனுக்காக மட்டுமே உண்ணாவிரதம் இருந்துள்ளேன்  என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சங்கர் சிங் வகேலா கூறியுள்ளார்.
மேலும் ராம் விலாஸ் பஸ்வான்,லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் கூறும்போது; தன்னை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தரம் உயர்த்திக் கொள்வதற்காக, உண்ணாவிரதம் என்ற அரசியல் நாடகத்தை நரேந்திர மோடி அரங்கேற்றுகிறார். மதச்சார்பற்ற தலைவராக, தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன், உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார். இவ்வாறு உண்ணாவிரதம் இருப்பதன் மூலம், தன் மேல் உள்ள மதச் சார்பு முத்திரையை, அவர் அழித்து விட முடியாது’ என அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய ஜனதா தளம் இந்த உண்ணாவிரத்தை விமர்சித்துள்ளது. அதுபற்றி அக் கட்சியின் தலைவர் சரத் யாதவ் கூறும்போது, “நாட்டில் 78 சதம் மக்கள் தினசரி 20 ரூபாய்தான் சம்பாதிக்கிறார்கள். 80 சதம் மக்கள் தினசரி பட்டினியால் தவிக்கிறார்கள். ஒரு வேளை சாப்பிட்டு, மீதி நேரம் பட்டினியால் தவிக்கும் அவர்களைப் பற்றி விவாதிக்க யாரும் இல்லை” மேலும் தேவை இல்லாத ஒன்று  என்று மோடியின் உண்ணாவிரதத்தை விமர்ச்சித்துள்ளார்.

Wednesday, September 21, 2011

சாத்தானின் போலி உண்ணாவிரதம்!

நரேந்திர மோடி என்கிற மனிதகுல விரோதி, மனிதாபிமானம் இல்லாத மிருகம் 2002-ம் ஆண்டில் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரத்தில் ஹிந்து பயங்கரவாதிகளால் 5000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். அச்சமயம் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியினரின் ஆட்சி மத்தியில் நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் ஒரே ஒரு மிதவாத தலைவர் திரு. வாஜ்பாய் ஆவார். சுருங்கச்சொன்னால் தீவிரவாதிகளுக்கு மத்தியில் ஒரு மிதவாதி. குஜராத்தில் பயங்கரவாதி மோடி தலைமையில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான மதகலவரத்தையும் அதை தொடர்ந்து நடைபெற்ற துயரமான சம்பவங்களையும் நினைத்து மனம் வருந்திய பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதல்வர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதம் இப்போது வெளியே வந்து கொலைகாரன் மோடியை துரத்துகிறது.

இப்போது 9 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த கடிதம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி வெளி கொண்டுவர பட்டுள்ளது. அந்த கடிதத்தில் வாஜ்பாய் கூறியிருப்பதாவது குஜராத்தில் நடைபெற்ற கலவரமும், அதைத் தொடர்ந்து நடந்த துயரச் சம்பவங்களும் என்னை கடும் மனவேதனைக் குள்ளக்கி உள்ளது. குஜராத்தில் இருந்து எங்களுக்கு புகார்கள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன. அங்கு சிறுபான்மை மக்கள் உயிர் வாழ்வது கேள்விக்குறியாகி விட்டது, கலவரத்தை நீங்களே (மோடி) முன்னின்று நடத்துவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன, அங்கு என்ன நடக்கிறது, உங்களுக்கு என்னவிதமான உதவிகள் தேவை என்னிடம் கேளுங்கள், உடனே அதை மத்திய அரசு செய்யும், சிறுபான்மையினரின் உயிர்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு இந்த நாட்டில் வாழ முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டு விட கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

சிந்திக்கவும்: அமைதி, ஒற்றுமை, மதநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி இந்த ஹிந்துத்துவா சாத்தான் வேதம் ஓதுகிறது. வாஜ்பாயின் கடிதம் வெளிவந்திருக்கும் இந்த வேளையில் மோடியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமித்து போகாமல் இருக்க இந்த போலி உண்ணாவிரதம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. வாஜ்பேய்க்கு அடுத்து பாரதிய ஜனதாவில் பெயர் சொல்லும் அளவுக்கு முக்கிய தலைவர்கள் யாரும் இல்லை என்பதால் பயங்கரவாதி மோடி முன்மொழியப்பட்டு வருகிறார்.

மேலும் மோடி குஜராத்தில் பண்ணிய கலவரத்தால் பாரதியஜனதா கட்சி மீண்டும் மத்தியின் ஆட்சியை பிடிக்கும் கனவு நினைவாகமலே இருந்து வருகின்றது.  இது இரண்டையும் ஒரே நேரத்தில் சரிசெய்யவே இந்த போலி உண்ணாவிரதம். என்று எது போன்ற பயங்கரவாதிகள் தண்டிக்கப் படுகிரார்களே அன்றே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் இல்லையேல் இந்தியாவை பாதுகாக்க யாராலும் முடியாது.

Friday, September 16, 2011

வேண்டுமா? மின்சாரம்

கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.
 
அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?
திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ்லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.

Saturday, September 10, 2011

ஆந்திர மாநிலம் அதொனியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் – இருவர் பலி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குர்நூல் மாவட்டம் அதொனியில் மதக்கலவரம் வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் பன்னிரெண்டு பேர் படுகாயமுற்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் 20 காவலர்களும் இதில் அடக்கம்.


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊர்வலம் சென்றவர்கள் கஜிபுராவில் உள்ள மதினா மஸ்ஜித் வழியாக மேளதாளம் மற்றும் ஆட்டம் பாட்டத்துடன் சென்றுள்ளனர். லுஹர் தொழுகை நடந்துகொண்டிருந்த நேரம் ஆதலால் முஸ்லிம்கள் மேளதாள சத்தத்தை சிறிது தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் ஊர்வலம் சென்றவர்களோ மஸ்ஜிதின் மீது கல் எரிந்ததுடன் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கலவரகாரர்கள் மஸ்ஜிதுல் நுழைந்து தீ வைக்க முயற்சித்துள்ளனர். மேலும் பள்ளியின் மினாராக்களை சேதப்படுத்தி உள்ளனர். இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிர் இழந்தனர். மேலும் முஸ்லிம் வீட்டினுள் புகுந்து சமையல் எரிவாயு சிலிண்டரை வெடிக்கச் செயததுடன் முஸ்லிம்களுக்கு சொந்தமான 10 லாரிகளையும் தீக்கிரையாக்கினர்.

மேலும் சியாசாத் இணையதள நிருபர் சிராஜுதீன் சம்பவ இடத்திற்கு சென்று செய்தி சேகரித்து கொண்டிருந்தார். அவருடைய இருசக்கர வாகனமும் கேமராவும் தீக்கிரையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சம்பவம் குறித்து உள்ளூர்வாசியான அலி ஹஸ்மி இது ஒரு திட்டமிட்ட கலவரம் எனக்கூறினார்.

கலவரத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும் கலவரத்தை நிறுத்த இயலவில்லை எனவே போலீசார் வானத்தை நோக்கி சுட்டு கலவரத்தை நிறுத்தினர். மேலும் அங்கு மூன்று நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.

Sunday, September 4, 2011

உண்ணாவிரதம் நடத்தும் போலிகளும், நிஜங்களும்!

SEP 04, இம்பால்: அன்னா ஹசாரே உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் என்று மணிப்பூர் மக்களுக்காக ராணுவத்துடன் போராடி வரும் மணிப்பூர் இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா விமர்சித்துள்ளார்.

அவரை அணுகி அன்னா ஹசாரே போராட்டம் பற்றி கேட்டபோது, அவர் போராட்டம் செயற்கை தனமானது. மணிப்பூரில் உள்ள மக்களின் அவலநிலை குறித்து வெளி மாநிலங்களில் பலருக்கும் தெரியவில்லை. அவர் இங்கு வந்து எங்களுடன் போராடினால் வரவேற்பேன். பாதுகாப்புப் படையினர் நடத்தும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Thursday, September 1, 2011

ஆரியர்கள் கையில் சிக்கித்தவிக்கும் தமிழகம்!

ஒருவகையாக முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு வழங்கப் பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றுமாறு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை எதிர்த்து அரசியல் கோமாளியும் பார்ப்பன ஹிந்துத்துவா சுப்பிரமணிய சுவாமி

Monday, August 29, 2011

தூக்குதண்டனையை எதிர்க்கும் தமிழர்கள்! ஆதரிக்கும் ஆரியர்கள்!


தூக்கிலிட ஆதரவு: 1 . முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு விவகாரம் தொடர்பாக ஜனதா கட்சித் தலைவர் ஹிந்துத்துவா பயங்கரவாதி அரசியல் கோமாளி சுப்ரமணிய சுவாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இவர்களை தூக்கில் போட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் ஆகஸ்ட் 15-க்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்வேன் என்ற

ஈழத்தமிழர்களை தூக்கிலிட்டால் தமிழகமே பற்றி எரியும்!

செய்யாத குற்றத்திற்காக தண்டனையை அனுபவிக்கும் சிறைக்கைதிகள்தான் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையில் சிக்கியுள்ளவர்கள்.

செய்தி  1 , கருணாநிதி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய

Thursday, August 25, 2011

விலை போகும் நீதித்துறை! கொக்கரிக்கும் கொலைகாரர்!

AUG 26,  சென்னை:  காஞ்சி வரதராஜ பெருமாள்கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதியுடன் காஞ்சி ஜெயேந்திரர் தொலை பேசியில் பேசும் ஆடியோ சிடி வெளியாகியுள்ளது. 

நீதிபதிக்கு பணம் கொடுத்து வழக்கிலிருந்து தப்பிக்க ஜெயேந்திரர் முயல்வதாக

Wednesday, August 24, 2011

பாபர் மசூதி இடிப்பில் கரசேவர்களுக்கு ஹவாலா பணம் பயன் படுத்தப்பட்டது சி.பி.ஐ விசாரணையில் புதிய திருப்பம் !!!

புதுடெல்லி, ஆக. 22- உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் உத்தரபிரதேசத்தில் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையே பாபர் மசூதி இடிப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. கரசேவகர்களை அழைத்து வந்தது

இந்திய ஜன நாயகத்துக்கு எதிரான கயவர்களின் நாடகம்! அருணா ராய்

புதுடெல்லி Aug, 23 : தகவல் உரிமைச் சட்டத்தையும், வேலை உறுதி திட்டத்தையும் நாட்டிற்கு அளித்த அருணாராயின் தலைமையிலான பொது சமூக பிரதிநிதிகள் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


அப்பாவி பொது மக்களை கொன்று குவித்த இந்திய இராணுவத்தின் வீர செயல் !!!

புதுடெல்லி, ஆக. 23- இந்திய அரசின் காஷ்மீர் மாநில மனித உரிமைகள் ஆணையம், அங்குள்ள நிலமைகள் குறித்து, கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தது. மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தலைமையில் 11 உறுப்பினர்களை கொண்ட இந்த குழு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஒரு ஆழமான விசாரணையை மேற்கொண்டது.


இந்த குழுவின் விசாரணை அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

Friday, August 19, 2011

காந்திய வாதி நாடகமும் காவி வாதி அரேங்கேற்றமும்?

புதுடெல்லி, ஆக 17 : வலுவான லோக்பால் மசோதாவுக்காக இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்த அன்னா ஹஸாரே இன்று திடீரென அவரது வீட்டில் வைத்து கைதுச் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஹஸாரேவின் போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹஸாரே போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கைதுச் செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

சஞ்சீவ் பட் கைது வாரன்ட், நர மாமிச அரசு !!

ஜாம்நகர் : குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திரமோடியின் பங்கினைக் குறித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ்பட்டை கைதுச்செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Wednesday, August 10, 2011

சுப்பிரமணியம் சுவாமியின் எழுத்திலும் விஷம் (பகுதி 2)

 
சம காலத்தில் இந்தியாவிற்கு எதிராக நடந்து வரும் இஸ்லாமிய தீவிரவாதத்திலிருந்தும், தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம் என்னவென்றால், இந்துக்களை எதிரிகளாகவும், இந்திய முஸ்லிம்கள் இந்துக்களை எதிர்க்கும் விதத்தில் மூளைச் சலவையின் மூலம் வடிவமைக்கப் படுகிறார்கள். இதனால் முஸ்லிம்கள் தற்கொலைத் தாக்குதல்

Monday, June 27, 2011

ஷர்மிளாவின் உண்ணாவிரதத்தை ஏன் கண்டுகொள்வதில்லை? அரசைக் கேள்வி கேட்கும் பொது சமூகம்

நியூ டெல்லி: ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் 1958,  (Armed Forces (Special Powers) Act, 1958 (AFSPA) ஐ நீக்கக் கோரி நவம்பர் 2000 முதல் தொடர்ந்து  உண்ணா விரதம் இருந்து வரும் இரோம் சானு ஷர்மிலா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஜூன் 25 அன்று புது டெல்லியில் உள்ள ராஜ் காட்டில்

Sunday, June 26, 2011

IFF நடத்திய 'நல்ல குடும்பம், நல்ல சமூகம்'

தம்மாம்: தம்மாமில்  உள்ள புலம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம்களிடையே ஒரு விழிப்புணர்வை உருவாக்க இஸ்லாத்தைப்பற்றியும் , குடும்ப வாழ்க்கையைப்பற்றிய  அதன்போதனைகள் பற்றியும்  இந்தியன்  பிராடெர்னிட்டி போரம்  (IFF) ஜூன் 24 அன்று 'நல்ல குடும்பம், நல்ல சமூகம்' (BETTER FAMILY, BETTER SOCIETY) என்ற ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.





ரியாஸ் அஹமத் தனது உரையில்,  "முஸ்லிம்களின் தற்போதைய நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது என்றாலும், நமது சமூகத்தை மறுசீரமைப்பு செய்ய பல வாய்ப்புகள் உள்ளன என்பதை நினைக்கும்போது ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது. சமூகக் கடமைகளை நிறைவேற்றவும், ஒற்றுமையை நிலை நாட்டவும், மாற்றத்திற்கான செயல்பாடுகளில்  நிலை குலைந்து போகாமல் இருக்கவும் வலியுறுத்தினார்.


ஏராளமானோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், மக்தூம் நைனா அவர்கள், "மேற்கத்தியக் கலாசாரம் குடும்ப அமைப்பைச் சீரழித்துவிட்டது. எனவே, குடும்ப அமைப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மக்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.


நன்றி: டூசர்கில்

Thursday, June 23, 2011

போர்பெஸ்கஞ் படுகொலையில் சிபிஐ விசாரணை கோரி எஸ்.டி.பி.ஐ. மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகள் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி

By Mumtaz Alam Falahi, TwoCircles.net,

பாட்னா: போர்பெஸ்கஞ் போலீஸ் துப்பாக்கி சூட்டைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகளால் நடத்தப்பட்ட முதல் எதிர்ப்புப் பேரணி இது தான். இதில் அரை டஜனுக்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்து கொண்டன. பேரணியில் கலந்து கொண்டவர்கள் முதல்வர் நிதீஷ் குமாருக்கு எதிராகவும், துணை முதல்வரும், பிஜேபி தலைவருமான சுசில் குமார் மோடிக்கு எதிராகவும் கடுமையான கோசங்களை எழுப்பிக்கொண்டே சென்றனர். அவர்கள் பீகாரில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தவும், துப்பாக்கி சூட்டில் 6  அப்பாவி முஸ்லிம்கள் பலியானதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
 





















நேற்று (ஜூன் 22) மதியம் 2  மணிக்கு காந்தி மைதானத்திலிருந்து பேரணி துவங்கியபோது கலந்து கொண்டவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பேரணி கவர்னர் மாளிகையை நோக்கி சென்றது. இருந்தபோதிலும், செல்லும் வழியில் ஏராளமான மக்கள் இப்பேரணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இது போன்ற பேரணியை நடத்தி முடிக்க முஸ்லிம் அமைப்புகளுக்கு 20 நாட்கள் தேவையாகிவிட்டது.
பேரணியின் முடிவில், கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆளுநரின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இக்கூட்டமைப்பில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, பாரதிய மூமின் பிரண்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் சில அமைப்புகள் கலந்து கொண்டன.
 
கோரிக்கைகள்:
 
* BJP MLC அசோக் அகர்வால், அவரின் மகன் சௌரப் அகர்வால், SP, அராரிய கரிமா மாலிக், SDO அசோக் சௌதரி ஆகியோரைக் கைது செய்து, பிரிவு 302-இன் கீழ் வழக்குப் பதிய வேண்டும்.
* போர்பெஸ்கஞ் கிராமத்தின் பழைய பாதையை மீண்டும் திறந்து விட வேண்டும்.
* கிராமவாசிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலத்தை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
* இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்.
 

Wednesday, June 22, 2011

காவி யுத்தம் வெளிப்படுத்தும்  ஹிந்துத்வா பயங்கரவாதம்: சந்தீப் பாண்டே 

Original_mg-safron-war-hindutva
ஆவணப்படம் "காவி யுத்தம்" திரையிடப்பட்டது; யோகியின் அரசியல் சமூக  அமைப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்: ரூப் ரேகா வெர்மா
The Milli Gazette
லக்னௌ: காவி யுத்தம் - தேசத்திற்கெதிரான போர் - மத தீவிரவாத அரசியலை ஆதரித்துப் பேசும் பிஜேபி MP -யும், கோரக்நாத் பீடத்தின் தற்போதைய மடாதிபதியுமான  யோகி ஆதித்யநாத்-இன் மத வெறியை மையக் கருத்தாகக்  கொண்டு தயாரிக்கப்பட்ட ஆவணப்படம், UP பத்திரிக்கையாளர் மையத்தில் ஏப்ரல் 16 அன்று திரையிடப்பட்டது. இப்படம் ஹிந்துத்வா அமைப்புகளால் நாட்டில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாதச் செயல்களை காட்சிப்படுத்தி இருக்கிறது.

இப்படத்தை திரையிட்ட பிறகு நடந்த கலந்துரையாடலில் பார்வையாளர்களிடம் சமூக சேவகர் சந்தீப் பாண்டே விளக்கமளித்தார். கிழக்கு உ.பி. முழுவதும் ஹிந்துத்வா பயங்கரவாதம் சோதித்துப் பார்க்கப்படுகிறது. ஆனால் இச்சோதனைகளை உ.பி.அரசாங்கம் தொடர்ந்து கண்டு கொள்வதே இல்லை. யோகி ஆதித்யனாத்தும், அவரால் ஆதரிக்கப்படும்  ஹிந்து யுவ வாகினியும் அப்பகுதிகளில் தொடர்ந்து கலவங்களையும், படுகொலைகளையும் நடத்தி வருகின்றன. சில நாட்களுக்கு முன் கலீதாபாத்துக்குச் சென்று கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர் சொஹ்ராப், ஹிந்து யுவ வாகினியைச் சேர்ந்த தீவிரவாதிகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இது போன்ற சூழ்நிலையில் தான், இப்படத்தின் மூலம் அங்கு நடத்தப்பட்டு வரும் மதவெறி சோதனையை வெளிக்கொண்டு வந்திருக்கிறோம்.

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சொஹைப் கூறியதாவது: காவி யுத்தம் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் பயங்கரவாத செயல்களை ஆவணப்படுத்தி இருப்பதோடு, தலித்துகளும், பெண்களும், குழந்தைகளும் எவ்வாறு மதவெறி ஊட்டப்படுகிரார்கள் என்பதையும் தெளிவாக பதிவு செய்திருக்கிறது.

லக்னௌ பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், சாஜி துனியாவின் செயலாளருமான பேராசிரியர் ரூப் ரேகா வெர்மா அவர்கள் பேசும்போது, உ.பி. முழுவதும் புரட்சிகரமான செயல்களால் ஏற்படும் முன்னேற்றத்தில் நம்பிக்கை இல்லாதவர்களிடம் சிக்கித் தவிக்கிறது. அப்பகுதி சமூக கட்டமைப்பு  முழுவதும் மதவாத சக்திகளின் நாட்டாமையின் கீழ் செயல்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கெதிரான ஏராளமான கொடுமைகள் தினமும் அரங்கேற்றப்படுகிறது.

அயோத்தியைச் சேர்ந்த ஒரு சாமியார் யுகள் கிஷோர் கரன் சாஸ்திரி அவர்கள் கூறியதாவது:  யோகி ஆதித்யனாத்தின் செயல்பாடுகள் அனைத்தும் யோகிகளின் வழமைக்கு  மாற்றமான நடவடிக்கைகளாகவே இருக்கிறது. இவரின் நடத்தையில் கடுமை வெளிப்படுகிறது. இது போன்ற ஆவணப் படங்களால் இங்கு நடத்தப்படும் மதவெறி சோதனைகளையும், நடவடிக்கைகளையும் மக்கள் அறிந்துகொள்வார்கள்.

ஹிந்தியில் தயாரிக்கப்பட்ட இப்படத்தை இயக்கியவர்கள் ராஜீவ் யாதவ், சாநவாஸ் ஆலம், லக்ஸ்மன் பிரசாத் ஆகியோராவர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள்: பேராசிரியர் நதீம் ஹஸ்னைன், அருந்ததி துரு, சீட்லா சிங், சுமன் குப்தா, அம்ப்ரிஸ் குமார், சித்தார்த் கலான்ஸ், ரந்தீர் சிங் சுமன், லால் பகதூர் சிங், ஏக்தா சிங், ரவி சேகர் போன்ற லக்னௌ-ஐச் சேர்ந்த பல அறிவுஜீவிகள் கலந்து கொண்டனர்.

Saffron War is available at Rs 95 (postage extra) from: 632/13, Shankarpuri, Kamta, Post: Chinhat,
Lucknow, UP–Tel: 09415254919, 09452800752 www.mediachargesheet.com)

Thursday, June 16, 2011

தினக்ஸ்: ஒரு கேடிக்கு முதல்வர் பதவி ஒரு கேடா??

தினக்ஸ்: ஒரு கேடிக்கு முதல்வர் பதவி ஒரு கேடா??
மோடியை ஆதரிக்கும் ஹிந்தி  திரைப்பட  இசை இயக்குனரும், பரேல்வி உலமாவும்

By TCN Special Corespondent,

அஹ்மதாபாத்: தேவ்பந்தின் தலைமை ஆசிரியர் மௌலானா குலாம் முஹம்மத் வஷ்டான்வியும், பிரபல தொழிலதிபர் ஜாபார் சரேஷ்வாலாவும் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை ஆதரித்து அறிக்கைகள் வெளியிட்டு பரபரப்பு அடங்குவதற்குள் இப்பட்டியலில் மீண்டும் சிலர் இணைந்துள்ளனர். அந்த புதுமுகங்கள் ஹிந்தி திரைப்பட இசை அமைப்பாளர் இஸ்மாயீல் தர்பாரும், பரேல்வி உலமா அப்துல் சத்தார் ஹம்தானியும் ஆவர். இவர்கள் மோடியின் "வளர்ச்சித் திட்டங்களையும், தீவிரவாத எதிர்ப்புக் கொள்கைகளையும்" ஆதரிக்கின்றனர்.

தர்பார் அரசியலில் நுழைந்து சாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருக்கிறார். டிசம்பர் 2012 -இல் நடக்கவிருக்கும் தேர்தலில் சூரத்திலிருந்து போட்டியிடுவதற்குண்டான எண்ணத்தோடு இருக்கிறார். ஹம்தாணி தன்னுடைய அரசியல் பிரவேசத்தைப் பற்றி இன்னும் தெளிவுபடுத்தவில்லை. 
தர்பார் சமீபத்தில் பிஜேபி தலைவர் நிதின் கட்கரியை நாக்பூரில் சந்தித்து தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து பேசியிருக்கிறார். பிறகு நாக்பூரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், 2002 -இல் நடந்த கலவரங்களை மறந்துவிடுமாறும், குஜராத்தில் (நரமாமிச) மோடியை ஆதரிக்க வேண்டும் என்றும் முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆச்சரியம் என்னவென்றால், 1993 -இல் போர்பந்தரிலுள்ள கோசபராவில் வெடிமருந்துகளையும், துப்பாக்கிகளையும் ஹம்தாணி கொள்முதல் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டவர். அவைகளை மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு தாவூத் இப்ராஹீமும், அவரின் கூட்டாளிகளும் பயன்படுத்தினர் என்றும் கூறப்பட்டது.

சுமார் 60 வயதைக் கடந்துள்ள ஹம்தாணி குஜராத் மாநில பரேல்வி முஸ்லிம்களிடையே நல்ல செல்வாக்குப் பெற்றவர். 
 
ஹம்தாநியுடன் கைது செய்யப்பட்ட 21 பேரும் தடா (Terrorist and Disruptive Activities Act) சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பிறகு நடந்த விசாரணையில் போதிய சாட்சியமின்றி குற்றம் நிரூபிக்க முடியாததால் விடுதலை செய்யப்பட்டனர்.
 
காங்கிரஸின் ஆதரவாளராக இருந்து வந்த ஹம்தாணி, சிறையிலிருந்து விடுதலையான பிறகு அதற்கு நேர் எதிரான நிலையில் இருக்கிறார். அவர் இதுவரை வேறு எந்தக் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ளாவிட்டாலும், போர்பந்தரில் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மோடியை புகழ்ந்து தள்ளியுள்ளார். மேலும், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரான குஜராத்தைச் சேர்ந்த அஹமத் படேல்-ஐ "தீவிரவாதிகளின் ஆதரவாளர்" என்றும் சாடியுள்ளார். 
 தப்லீக் ஜமாஅத்-ஐ தீவிரமாக எதிர்க்கும் ஹம்தாணி, அதனை தீவிரவாதிகளை ஆதரிக்கும் அமைப்பு என்கிறார். அஹமத் படேல் ஒரு தப்லீக்-இன் ஆதரவாளர். எனவே அதன் உருவாக்கமான அவரும் ஒரு தீவிரவாதியே என்கிறார்.
 
மோடியைக் குறித்து ஹம்தாணி கூறுவதாவது: "மோடி தீவிரவாதத்தை எதிர்த்து பலத்தைப் பிரயோகிக்கிறார்." ஆனால், பொதுவான முஸ்லிம்கள் 2002 -இல் நடந்த கலவரத்துக்கும், அதில் 2000 -க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், பல நூறு கோடி மதிப்புள்ள முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப் பட்டதற்கும் மோடியே காரணம் என்று தெளிவாகச் சொல்கிறார்கள்.
 
ஹம்தானியால் 3 மூத்த IPS அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் சிக்கியிருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிட வேண்டியதாகும். அதுல் கர்வால், H P சிங்க், சதீஸ் வெர்மா ஆகியோரே அந்த 3 பேராவர். அவர்கள் போர்பந்தரில் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஹம்தானிக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஜூன் 11 அன்று குஜராத் அரசால் அறிவிக்கை அனுப்பப் பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் யாட்டின் ஓஜா அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட போது நலன் வழக்கினை குஜராத் உயர்நீதி மன்றம் விசாரித்து உத்தரவிட்ட பிறகே இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இது போன்ற நடவடிக்கைகள் மோடிக்கு ஆதரவாக இருப்பது போல் தோன்றினாலும்,  அவர் இதன் மூலம் தன்னை திறமையான தலைவரைப் போல் காட்டிக்கொண்டு, ஒரு வேலை மத்தியில் பிஜேபி ஆட்சி அமைத்தால் பிரதமராகலாம் என்று கனவு காண்கிறார். ஆனால், இதில் மிகவும் நெருடலாக இருப்பது 2002 கலவரம் தான்.

நன்றி: TwoCircles.net

Tuesday, June 14, 2011

POPULAR FRONT OF INDIA ORGANISED "SCHOOL CHALO"

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய "ஸ்கூல் சலோ" கல்வி விழிப்புணர்வுப் பிரச்சாரம்

12/06/2010; PFI CBE;

பாப்புலர்   ப்ரண்ட் ஆப் இந்தியாவின்  சார்பாக மே முதல் ஜூன் வரை நடை பெறும்   "SCHOOL CHALO" கல்வி விழிபுணர்வு பிரச்சாரம் தற்போது  நடை பெற்று வருகின்றது. 
 
அதன் ஒரு பகுதியாக கோவை கரும்புக்கடை பகுதியில் 12-ஆந்தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று கல்வி விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. 
 
இதில் பெருந்திரலான குழந்தைகள் கல்வி  விழிப்புணர்வு பிரச்சார  தட்டிகளுடன் பேரணி சென்றனர். கரும்புக்கடை சுன்னத் ஜமாஅத் பள்ளி இமாம் அப்துல் அஜீஸ் பாகவி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
 
 அப்துல் அஜீஸ் பாகவி உரையாற்றுகிறார்
 
SDPI மாவட்ட தலைவர்  V.M.அபுதாகிர் சிறப்புரையாற்றினார். கரும்புக்கடை  பகுதி செயலாளர் K.M.அப்பாஸ் நன்றி உரையாற்றினார். கரும்புக்கடை  பகுதி தலைவர் முஹம்மது அலி அவர்கள் குழந்தைகளுக்கு பல்வேறு பரிசு பொருட்களை வழங்கினார். மிகவும் சிறப்பாக இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.  
 
ஊர்வலத்தில் ஆர்வமாக பங்கேற்ற சிறுவர், சிறுமியர் 













Thursday, June 9, 2011

பிஜேபி பஞ்சாயத் துணைத் தலைவர் SDPI-இன் ஆதரவுடன் UDF-ஆல் தோற்கடிக்கப்பட்டார் 

Submitted by admin4 on 8 June 2011 - 12:27pm
By TCN News,

காசர்கோடு: மஞ்சேஷ்வர் கிராமத்தின் பஞ்சாயத் துணைத் தலைவராக பிஜேபி-இன் ஹரிஷ்ச்சந்திரன் பதவி வகித்து வந்தார். நேற்று SDPI-இன் ஆதரவுடன் UDF (காங்கிரஸ் கூட்டணி)ஆல் அப்பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். துணைத் தலைவருக்கு எதிராக UDF - ஆல் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் SDPI -இன் ஒரே ஒரு கிராம பஞ்சாயத் உறுப்பினரான மைமூனா அபூபக்கர் அவர்கள் UDF -ஐ ஆதரித்து அளித்த வாக்கின் மூலம் அவர் தோற்கடிக்கப்பட்டார். பிஜேபி-யும், இடதுசாரிகளும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

காசர்கோடு மாவட்டத்திலுள்ள மன்ஜெஷ்வர் கிராம பஞ்சாயத்தில் மொத்தமுள்ள 21 உறுப்பினர்களில் முஸ்லிம் லீகும், பிஜேபி-யும் தலா 8 உறுப்பினர்களையும், SDPI, CPI (M), CPI, காங்கிரஸ், சுயேச்சை ஆகியவைகள் தலா 1 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன. SDPI உறுப்பினரும், சுயேச்சை உறுப்பினரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

6 மாதத்திற்கு முன்பு நடந்த பஞ்சாயத் துணைத் தலைவர் தேர்தலில் ஹரிஷ்ச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, அவரை ஆதரித்து ஒரு முஸ்லிம் லீக் உறுப்பினர் வாக்களித்தார். காங்கிரஸ் உறுப்பினரின் வாக்கு செல்லாமல் போனதால் அவருக்கு அப்பதவி கிடைத்தது. பிறகு முஸ்லிம் லீக்கால் அவ்வுறுப்பினர் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். பிறகு நடந்த இடைத் தேர்தலில் மற்றொரு முஸ்லிம் லீக் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து UDF நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வரத் தீர்மானித்தது.

Wednesday, June 8, 2011

6 முஸ்லிம்கள் துப்பாக்கி சூட்டில் பலி: போலீசார் மீது நடவைக்கை எடுக்க நிதீஷ் குமாரிடம் மில்லி கவுன்சில், வெல்பேர் பார்ட்டி வலியுறுத்தல்

By Md. Ali, TwoCircles.net,

நியூ டெல்லி: பீகாரிலுள்ள அராரியா மாவட்டத்திலுள்ள போர்பெஸ்கஞ் பிளாக்-ஐச் சேர்ந்த மக்கள், இரண்டு கிராமங்களை இணைக்கும் சாலைக்கு இடையே உள்ள தடுப்பை நீக்கக் கோரி நடத்திய அறவழிப் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

சம்பவம் குறித்து மில்லி கவுன்சிலின் பொதுச் செயலாளர் திர. மன்சூர் ஆலம் TwoCircles.நெட்-டிடம் பேசும்போது, "நிதீஷ் குமார் எந்த மதசார்பற்ற கொள்கையை பின்பற்றுகிறார் என்பது முக்கியமல்ல. போகும் வழியில்  6 அப்பாவி முஸ்லிம்களை போலீசார் குறிவைத்து சுட்டுக் கொன்றுள்ளனர். இது இவருக்கும், RSS -க்குமிடையே எவ்வித வேற்றுமையும் இல்லை என்பதையே காட்டுகிறது."  போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை ஒளிவு மறைவின்றி விமர்சிக்கிறார். நிராயுதபாணிகளான கிராமத்தினரை துரத்திச் சென்றும், வீட்டுக்குள் புகுந்தும் சுட்டுக் கொன்றுள்ளனர். சிறு குழந்தைகளையும், பெண்களைக் கூட விட்டு வைக்கவில்லை. முஸ்லிம்களை சுட்டுக் கொள்வது என்பது போலீசாரின் பொதுவான செயல் திட்டம் என்றாகிவிட்டது. ஏனென்றால், நீதிக்கு முன் நிறுத்தாமலேயே சிறுபான்மை முஸ்லிம்களை சுட்டுக் கொள்ளலாம் என்று அவர்கள் புரிந்து வைத்துள்ளார்கள்" என்கிறார் Dr. ஆலம்.

நிதீஷ் குமார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் Dr. ஆலம் கூறுகிறார்: நிதீஷ் குமார், அவரின் மதிப்பைக் குறித்து சிந்திக்கக் கூடியவர் என்றால், தவறிழைத்த காவலர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பக்களுக்கு தலா 7 லச்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்" என்று.


Dr. Manzoor Alam, general secretary of Milli Council
Mujtaba Farooque, president of the recently launched political party Welfare Party of India (WPI), said, “The brutal way in which the police acted and fired at the unarmed villagers shows its biased mentality. There were ways through which the tragedy could have been averted but it’s complete highhandedness of the administration to think that it can kill innocent poor Muslims and no body will say anything.”
“The way Nitish Kumar government has handled the situation is completely unacceptable and the WPI is certainly going to raise the issue as the state as well as the national level,” added Farooque.
Both Farooque and Manzoor Alam said that the community organizations will take immediate and required action against this kind of brutality against the minorities which if not stopped then will continue.


Mujtaba Farooque, president of Welfare Party of India
Dr Alam said that Milli Council will soon get in touch with other community organization and will take action in three ways. First of all efforts will be made to collect the testimonies and witnesses of the case and think of the possibility of taking legal action against those responsible for the worst kind of human rights violation.
Besides writing a letter to National Human Rights Commission, a delegation will also meet the Chief Minister of the state and will press for action. Dr Alam said, “We will also try to bring together all the Muslim MLAs and MLCs of the state and bring about a political pressure on the state government.”
And if the state government doesn’t respond then community organizations will organize protest against the state brutality in Bihar as well as at the national level.

Tuesday, June 7, 2011

எகிப்திலுள்ள "இஹ்வானுல் முஸ்லிமீன்"-இன் கட்சி பதிவு செய்யப்பட்டது

கெய்ரோ:  இஹ்வானுல் முஸ்லிமீனால் துவக்கப் பட்ட சுதந்திரம் - நீதி கட்சி (Freedom and Justice Party) எகிப்தின் அரசியல் கட்சிகளுக்கான கமிசனால் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டது. விரைவில் நடக்கவிருக்கும் தேர்தலில் தங்களின் கட்சி பங்கேற்கும் என்றும் அவர்களின் வலை தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று  முறைப்படி அங்கீகரிக்கப்பட்டது. இதன் மூலம் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடக் கூடிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இக்கட்சி மதசார்பற்றதாகவும், இஹ்வானுல் முஸ்லிமீனின் தலையீடு இல்லாமல் செயல்படக் கூடியதாகவும் இருக்கும். செப்டெம்பரில் நடக்கும் தேர்தலில் மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களில் பாதி எண்ணிக்கையைப் பெரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

"புதிய கட்சிகள் சட்டத்தில் கூறப்பட்டுள்ள, ஒரு கட்சிக்குத் தேவையான எல்லா பத்திரங்களையும் முறைப்படி பெற்று சுதந்திரம் - நீதி கட்சி இன்று (திங்கள்) அங்கீகரிக்கப் பட்டது" என எகிப்தின் கெஜட் வலை தளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இஸ்லாமிய சட்ட திட்டங்களின் அடிப்படையிலேயே இக்கட்சி செயல்படும் என்று கூறிக்கொண்டாலும், அதில் மென்மைப் போக்கை கடைபிடிக்கும் வகையில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவரை அதன் துணைத் தலைவராக நியமித்துள்ளது. மேலும் கிறிஸ்தவர்களையும், பெண்களையும் கட்சியில் இணைத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

9000 அடிப்படை உறுப்பினர்களைப் பெற்றுள்ளதாக கடந்த மாதத்தில் இக்கட்சி அறிவித்தது. 1928-இல் இமாம் ஹசன் அல்-பன்னா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட "இஹ்வானுல் முஸ்லிமீன்" இயக்கம், அப்போதைய ஜனாதிபதி கமால் அப்துல் நாசரை கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறி 1954 -இல் தடை செய்யப்பட்டது.

1970 -இல் அவ்வியக்கம் வன்முறைப் பாதையைக் கைவிட்டதாகக் கூறிய பிறகும் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. அதுவே ஹோஸ்னி முபாரக்கை பதவியிலிருந்து துரத்த மிக முக்கியப் பங்காற்றியது. எகிப்தின் அதிபர் பதவியிலிருந்து முபாரக் நீக்கப்பட்டு நான்கு மாதங்களுக்குப் பிறகு இயக்கம் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டது. 

வரவிருக்கும் அதிபர் தேர்தலில் இவ்வியக்கம் பங்கேற்காது என்று அறிவித்துள்ள போதும், அதன் தலைவர்கள் அப்துல் முனிம் அபு அல்-புது, ஷேக் ஹசம் அபு இஸ்மாயில் ஆகிய இருவரும் போட்டியிடப் போவதாக தங்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

நன்றி :  Twocircles.com