Wednesday, August 10, 2011

சுப்பிரமணியம் சுவாமியின் எழுத்திலும் விஷம் (பகுதி 2)

 
சம காலத்தில் இந்தியாவிற்கு எதிராக நடந்து வரும் இஸ்லாமிய தீவிரவாதத்திலிருந்தும், தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம் என்னவென்றால், இந்துக்களை எதிரிகளாகவும், இந்திய முஸ்லிம்கள் இந்துக்களை எதிர்க்கும் விதத்தில் மூளைச் சலவையின் மூலம் வடிவமைக்கப் படுகிறார்கள். இதனால் முஸ்லிம்கள் தற்கொலைத் தாக்குதல்
என்னும் யுக்திக்குள் விழுந்துவிடுகிறார்கள். இந்துக்களின் ஆன்மாவை பலம் குன்றச் செய்யவும், மதக் கலவரம் என்ற அச்சத்தை ஏற்படுத்தவும் இது போன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் அரங்கேற்றப்படுகின்றன.

இந்துக்கள் தீவிரவாதிகளுக்கு எதிரானவர்கள் என்பதைக் காட்ட இந்துக்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். தனித்து விடப்பட்டுவிட்டோம் என்றோ, நம் நிலைமை மோசம் என்றோ எண்ணாமல் மன தைரியத்தோடு இருக்க வேண்டும். ஏனெனில், அவனோ, அவளோ தனிப்பட்ட காரணங்களுக்காக பாதிக்கப்படவில்லை. அவனோ, அவளோ இந்து என்ற காரணத்தினாலேயே இந்து கொல்லப்படுகிறான் என்றால், மற்ற இந்துக்களின் ஒரு சிறு பங்கும் இறக்கிறது. இது தான் தேவையான மன நிலை. ஒரு தன்னார்வ இந்துவிற்கு தேவையான அடிப்படை அம்சம்.

நாம் அனைவரும் இந்துக்கள் என்ற ஒன்றுபட்ட உணர்வோடு இருந்தால் தான் இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்து நிற்க முடியும். இந்துவிற்காக உண்மையான நல்லெண்ணம் கொண்ட இந்திய முஸ்லிம்களை நம்மோடு சேர்த்துக் கொள்ளலாம். அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும், அவர்களின் முன்னோர்கள் இந்துக்களாக இருந்தார்கள் என்பதை பெருமையோடு ஏற்றுக் கொள்ளாத வரை அவர்களை நான் நம்பமாட்டேன். எந்த முஸ்லிமாவது அவனுடைய அல்லது அவளுடைய பரம்பரையை ஹிந்து பாரம்பர்யமாக ஏற்றுக் கொண்டால், அப்பொழுது இந்துவாகிய நாம் அவனை அல்லது அவளை மகா இந்து சமூகத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொள்ளலாம். அதுவே இந்துஸ்தான். இந்தியா அதாவது பாரதம் அதாவது இந்துஸ்தான் இந்துக்களின் தேசமாகும். மற்றவர்கள் அதாவது அவர்களின் முன்னோர்கள் இந்துக்களாக இருந்திருக்க வேண்டும். இதனை மறுக்கும் மற்றவர்கள் அனைவரும் மற்றும் இந்திய குடியுரிமை பெற்றுள்ள அயல்நாட்டவர்களும் இந்தியாவில் தங்கியிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது (அப்படியென்றால் அவர்கள் தங்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கக் கூடாது).

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு வகுக்கும் எந்த கொள்கையும் ஒவ்வொரு இந்துவும் தனித் தன்மையான இந்துவாக இருக்கிறானா என்பதைக் கொண்டே துவங்கப்பட வேண்டும். அதற்கு ஒருவன் தான் ஒரு இந்து என்ற மன நிலையைக் கொண்டிருக்க வேண்டும். அதுவே அவனிடம் சொந்த குணமும், தேசிய குணமும் உள்ளதை உணர்த்தும். உதாரணத்திற்கு, மன்மோகன் சிங் உயர்வான சொந்த குணத்தை பெற்றிருக்கிறார். ஆனால் அரைகுறையாகப் படித்த சோனியா காந்தியின் ரப்பர் ஸ்டாம்ப்-ஆக இருந்து தேசத்தின் அனைத்து பிரச்னைகளிலும் சிறுமையடைந்து போவது, அவர் எவ்விதமான தேசிய குணத்தையும் பெற்றிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இரண்டாவது பாடம் அவர்களின் எந்த விதமான கோரிக்கைகளுக்கும் செவி சாய்ப்பதோ, சிரம் பணிவதோ கூடாது. அதாவது நாம் 1989-ல் (முப்தி முஹம்மத் சய்யீதின் மகள் ரூபியாவை விடுவிக்க ஐந்து தீவிரவாதிகளை விடுதலை செய்தது போல) மற்றும் 1999-ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC-814 கடத்தப்பட்டதற்கு பதிலாக மூன்று தீவிரவாதிகளை விடுதலை செய்தது போலவும் செய்யக் கூடாது.

எந்தவிதமான மற்றும் எப்படிப்பட்ட ஒரு சிறிய தீவிரவாத சம்பவம் நடந்தாலும் தேசமே ஒன்றிணைந்து பதில் தாக்குதல் நடத்த வேண்டும். உதாரணத்திற்கு, அயோத்தி கோயிலை தாக்க முயற்சித்தால், அதே இடத்தில் நாம் ராமர் கோயிலை மீண்டும் கட்டி பதிலடி கொடுக்க வேண்டும்.

மனதில் உதிரம் கசியும் தலைவர்களின் கூற்றுப்படி, கல்வியறிவின்மை, ஏழ்மை, அடக்குமுறை, பாகுபாடு போன்ற காரணங்களால் தான் தீவிரவாதிகள் பிறக்கவோ, உருவாகவோ செய்கிறார்கள். தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு பதிலாக அதற்கு காரணமான நான்கு இயலாமைகளை ஒழிக்க வேண்டும் என்று வாதிடுகிறார்கள். இக்கருத்தை குப்பையில் போடுங்கள். உசாமா பின் லேடன் கோடீசுவரராக இருந்தவர். தோல்வியடைந்த டைம்ஸ் சதுக்க தாக்குதல் சம்பவத்தில் தோற்றுப்போன தீவிரவாதி ஷஹ்சாத் பாகிஸ்தானிலுள்ள மிகச் சிறந்த குடும்பத்தை சேர்ந்தவர். அங்கீகரிக்கப்பட்ட US பல்கலைக் கழகத்தில் MBA பட்டம் பெற்றவர்.

தீவிரவாதிகள் பகுத்தறிவற்றவர்களாகவும், சாவதற்கு துணிந்தவர்களாகவும் இருப்பதால் அவர்களை ஒடுக்க முடியாது என்பதும் கேலிக் கூத்தான வாதமாகும். தீவிரவாத கும்பலின் தலைவனுக்கு அரசியல் லட்சியம் உண்டு. அவர்களுடைய மடமையில் அதற்குரிய முறைகளும் உண்டு. அவர்களின் அரசியல் நோக்கத்தை தோல்வியடையச் செய்வதன் மூலமும், தீவிரவாதிகள் மீது நேரடித் தாக்குதல் நடத்தி அவர்களை நாசமாக்குவதன் மூலமும் அவர்களை ஒலிப்பது தான் மிகச் சிறந்த யுக்தியாகும். இந்தியாவிலுள்ள இஸ்லாமிய பயங்கரவாதத்தின் அரசியல் நோக்கங்களை ஒழித்துக்கட்ட கீழே காணும் திட்டங்களை நான் பரிந்துரைக்கிறேன்.

தொடரும்...

No comments:

Post a Comment

UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM