நியூ டெல்லி: ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் 1958, (Armed Forces (Special Powers) Act, 1958 (AFSPA) ஐ நீக்கக் கோரி நவம்பர் 2000 முதல் தொடர்ந்து உண்ணா விரதம் இருந்து வரும் இரோம் சானு ஷர்மிலா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஜூன் 25 அன்று புது டெல்லியில் உள்ள ராஜ் காட்டில்
மெழுகுவர்த்தி ஏந்திய ஊர்வலம் நடைபெற்றது.
மனித மதிப்பீடுகளையும், மனிதத் தன்மையையும், மனித உரிமைகளையும் பேணக்கூடிய பாதுகாப்பான, அமைதி நிலவக்கூடிய நிர்வாகமுறையை வலியுறுத்தி, இதற்கு எதிரான கறுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி தொடர்ந்து போராடி வருகிறார் இரோம் சானு ஷர்மிலா. பொது சமூக குழுக்களால் துவங்கப்பட்டுள்ள "சர் மிளாவைக் காப்போம்" பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே மெழுகுவர்த்தி ஏந்திய ஊர்வலம் நடத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தின் முக்கிய நோக்கம், அரசாங்கம் இராம் ஷர்மிளாவின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்பது தான். ஷர்மிலா நீண்ட நெடுங்காலமாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இது அஹிம்சைப் போராட்டமான காந்தியின் வழிமுறையாகும். மனித உரிமைக்கெதிரான நடவடிக்கைகளை எதிர்க்கும் போராட்டமாக இது இருந்தும், ஷர்மிளாவின் போராட்டத்தை பொறுத்தவரை அரசும், பொது சமூகமும் தொடர்ந்து பாராமுகமாகவே இருந்து வருகிறது.
NAPM அமைப்பைச் சேர்ந்த ஃபைசல் கான் அவர்கள் 'ஷர்மிளாவைக் காப்போம் இயக்கம்' குறித்து TwoCircles.net இடம் பேசும்போது, ஒரு நாடு தழுவிய கையெழுத்து இயக்கத்தை அக்டோபர் 2 -ஆம் தேதி முதல் டிசம்பர் 10 -ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளோம். காஷ்மீர் முதல் இம்பால் வரை ஒரு யாத்திரையையும் ஏற்பாடு செய்துள்ளோம்.
மெழுகுவர்த்தி ஏந்திய ஊர்வலத்தின் போது, ஜாமியா மில்லியா இஸ்லாமியாவைச் சேர்ந்த ஆராய்ச்சி அறிஞர் அக்கு சின்கன்பம் அவர்கள் இரோம் ஷர்மிளாவைப் பற்றிய ஒரு பாடலைப் பாடினார். பல்வேறு குழுக்களைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு, இரோம் ஷர்மிளாவின் போராட்டத்துக்கு தங்களின் மேலான ஆதரவை தெரிவித்தனர். அவர்களில் சிலர்: ஃபைசல் கான் (மக்கள் இயக்கத்தின் தேசிய கூட்டமைப்பு), வீணா பெஹேன் (காந்தி உலகளாவிய குடும்பம்), திருமதி நிர்மலா ஷர்மா (ஜாக்ருதி மஹிலா சமிதி), பேராசிரியர் வி.கே. திரிபாதி (சத்பாவன மிஷன்), முஹம்மத் தன்வீர் (சமூக ஆய்வுகள் ஆசிய மையம்), சந்தீப் மிஸ்ரா (மிஷன் பாரதியம்), பிஜு பெஹேன் (ஆஷா பரிவார்-அசாம்), சையத் அலி அக்தர் (யுவா கோஷிஷ்) மற்றும் டையான் ஹுசைன் (க்ஹோடயி கித்மத்கர் -வட கிழக்கு). தவிர, ஜவஹர்லால் நேரு தேசிய பல்கலை கழகம், ஜாமியா மிலியா, ஜாமியா ஹாம்தார்த் மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நன்றி: டூசர்க்ல்ஸ்
No comments:
Post a Comment
UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM