தம்மாம்: தம்மாமில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம்களிடையே ஒரு விழிப்புணர்வை உருவாக்க இஸ்லாத்தைப்பற்றியும் , குடும்ப வாழ்க்கையைப்பற்றிய அதன்போதனைகள் பற்றியும் இந்தியன் பிராடெர்னிட்டி போரம் (IFF) ஜூன் 24 அன்று 'நல்ல குடும்பம், நல்ல சமூகம்' (BETTER FAMILY, BETTER SOCIETY) என்ற ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
ரியாஸ் அஹமத் தனது உரையில், "முஸ்லிம்களின் தற்போதைய நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது என்றாலும், நமது சமூகத்தை மறுசீரமைப்பு செய்ய பல வாய்ப்புகள் உள்ளன என்பதை நினைக்கும்போது ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது. சமூகக் கடமைகளை நிறைவேற்றவும், ஒற்றுமையை நிலை நாட்டவும், மாற்றத்திற்கான செயல்பாடுகளில் நிலை குலைந்து போகாமல் இருக்கவும் வலியுறுத்தினார்.
ஏராளமானோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், மக்தூம் நைனா அவர்கள், "மேற்கத்தியக் கலாசாரம் குடும்ப அமைப்பைச் சீரழித்துவிட்டது. எனவே, குடும்ப அமைப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மக்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
நன்றி: டூசர்கில்
No comments:
Post a Comment
UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM