கெய்ரோ: இஹ்வானுல் முஸ்லிமீனால் துவக்கப் பட்ட சுதந்திரம் - நீதி கட்சி (Freedom and Justice Party) எகிப்தின் அரசியல் கட்சிகளுக்கான கமிசனால் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டது. விரைவில் நடக்கவிருக்கும் தேர்தலில் தங்களின் கட்சி பங்கேற்கும் என்றும் அவர்களின் வலை தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்களன்று முறைப்படி அங்கீகரிக்கப்பட்டது. இதன் மூலம் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடக் கூடிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இக்கட்சி மதசார்பற்றதாகவும், இஹ்வானுல் முஸ்லிமீனின் தலையீடு இல்லாமல் செயல்படக் கூடியதாகவும் இருக்கும். செப்டெம்பரில் நடக்கும் தேர்தலில் மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களில் பாதி எண்ணிக்கையைப் பெரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
"புதிய கட்சிகள் சட்டத்தில் கூறப்பட்டுள்ள, ஒரு கட்சிக்குத் தேவையான எல்லா பத்திரங்களையும் முறைப்படி பெற்று சுதந்திரம் - நீதி கட்சி இன்று (திங்கள்) அங்கீகரிக்கப் பட்டது" என எகிப்தின் கெஜட் வலை தளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்லாமிய சட்ட திட்டங்களின் அடிப்படையிலேயே இக்கட்சி செயல்படும் என்று கூறிக்கொண்டாலும், அதில் மென்மைப் போக்கை கடைபிடிக்கும் வகையில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவரை அதன் துணைத் தலைவராக நியமித்துள்ளது. மேலும் கிறிஸ்தவர்களையும், பெண்களையும் கட்சியில் இணைத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
9000 அடிப்படை உறுப்பினர்களைப் பெற்றுள்ளதாக கடந்த மாதத்தில் இக்கட்சி அறிவித்தது. 1928-இல் இமாம் ஹசன் அல்-பன்னா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட "இஹ்வானுல் முஸ்லிமீன்" இயக்கம், அப்போதைய ஜனாதிபதி கமால் அப்துல் நாசரை கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறி 1954 -இல் தடை செய்யப்பட்டது.
1970 -இல் அவ்வியக்கம் வன்முறைப் பாதையைக் கைவிட்டதாகக் கூறிய பிறகும் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. அதுவே ஹோஸ்னி முபாரக்கை பதவியிலிருந்து துரத்த மிக முக்கியப் பங்காற்றியது. எகிப்தின் அதிபர் பதவியிலிருந்து முபாரக் நீக்கப்பட்டு நான்கு மாதங்களுக்குப் பிறகு இயக்கம் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டது.
வரவிருக்கும் அதிபர் தேர்தலில் இவ்வியக்கம் பங்கேற்காது என்று அறிவித்துள்ள போதும், அதன் தலைவர்கள் அப்துல் முனிம் அபு அல்-புது, ஷேக் ஹசம் அபு இஸ்மாயில் ஆகிய இருவரும் போட்டியிடப் போவதாக தங்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
நன்றி : Twocircles.com
No comments:
Post a Comment
UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM