ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொள்ளும் பாபா ராம்தேவ் முதலில் தாம் நிரபராதி என்பதை நிரூபிக்கட்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் இல்லத் திருமணம் சேலம் அம்மாப்பேட்டையில் வெள்ளிக் கிழமை காலை நடைபெற்றது. இத்திருமண விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், ‘’ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ராம்தேவ்வும் தெரிவித்துள்ளார். பணம் சம்பாதிப்பது மட்டும் தான் அவரது குறிக்கோள். அவர் விமானம் வைத்து கொண்டு பறந்து கொண்டிருக்கிறார்.
அதிகம் நிதி வைத்து இருப்பவர்களைத் தான் அவர் அருகில் வைத்து கொள்வார். பணம் இல்லாதவர்களை வெளியில் தள்ளிவிடும் சுபாவத்தை கொண்ட அவர் லஞ்சத்தை ஒழிக்க போவதாக கூறுவது எனக்கு சந்தேகமாக இருக்கிறது.
முதலில் அவர் தன் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரித்து அவர் நிரபராதி என்று அறிவித்து விட்டு பின்னர் அவர் சமூக சேவையை தொடரலாம்’’ என்று கூறினார்.
நன்றி: இந்நேரம்

No comments:
Post a Comment
UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM