பிஜேபி பஞ்சாயத் துணைத் தலைவர் SDPI-இன் ஆதரவுடன் UDF-ஆல் தோற்கடிக்கப்பட்டார்
Submitted by admin4 on 8 June 2011 - 12:27pm
By TCN News,
காசர்கோடு: மஞ்சேஷ்வர் கிராமத்தின் பஞ்சாயத் துணைத் தலைவராக பிஜேபி-இன் ஹரிஷ்ச்சந்திரன் பதவி வகித்து வந்தார். நேற்று SDPI-இன் ஆதரவுடன் UDF (காங்கிரஸ் கூட்டணி)ஆல் அப்பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். துணைத் தலைவருக்கு எதிராக UDF - ஆல் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் SDPI -இன் ஒரே ஒரு கிராம பஞ்சாயத் உறுப்பினரான மைமூனா அபூபக்கர் அவர்கள் UDF -ஐ ஆதரித்து அளித்த வாக்கின் மூலம் அவர் தோற்கடிக்கப்பட்டார். பிஜேபி-யும், இடதுசாரிகளும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
காசர்கோடு மாவட்டத்திலுள்ள மன்ஜெஷ்வர் கிராம பஞ்சாயத்தில் மொத்தமுள்ள 21 உறுப்பினர்களில் முஸ்லிம் லீகும், பிஜேபி-யும் தலா 8 உறுப்பினர்களையும், SDPI, CPI (M), CPI, காங்கிரஸ், சுயேச்சை ஆகியவைகள் தலா 1 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன. SDPI உறுப்பினரும், சுயேச்சை உறுப்பினரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
6 மாதத்திற்கு முன்பு நடந்த பஞ்சாயத் துணைத் தலைவர் தேர்தலில் ஹரிஷ்ச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, அவரை ஆதரித்து ஒரு முஸ்லிம் லீக் உறுப்பினர் வாக்களித்தார். காங்கிரஸ் உறுப்பினரின் வாக்கு செல்லாமல் போனதால் அவருக்கு அப்பதவி கிடைத்தது. பிறகு முஸ்லிம் லீக்கால் அவ்வுறுப்பினர் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். பிறகு நடந்த இடைத் தேர்தலில் மற்றொரு முஸ்லிம் லீக் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து UDF நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வரத் தீர்மானித்தது.
No comments:
Post a Comment
UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM