Wednesday, August 24, 2011

அப்பாவி பொது மக்களை கொன்று குவித்த இந்திய இராணுவத்தின் வீர செயல் !!!

புதுடெல்லி, ஆக. 23- இந்திய அரசின் காஷ்மீர் மாநில மனித உரிமைகள் ஆணையம், அங்குள்ள நிலமைகள் குறித்து, கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தது. மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தலைமையில் 11 உறுப்பினர்களை கொண்ட இந்த குழு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஒரு ஆழமான விசாரணையை மேற்கொண்டது.


இந்த குழுவின் விசாரணை அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியா-பாகிஸ்தானை பிரிக்கும் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள 12-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று 38-க்கும் மேற்பட்ட இடங்களை பார்வையிட்டோம்.
அங்கு ஏராளமான கல்லறைகள் காணப்பட்டன. கணக்கிட்டு பார்த்த போது 2 ஆயிரத்து 156 கல்லறைகள் இருப்பது தெரிய வந்தது. கல்லறைகளில் புதைக்கப்பட்டு இருப்பவர்களை பற்றிய விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. கிராம மக்களிடம் விசாரித்த போது அவர்களுக்கும் இது பற்றிய விவரம் தெரியவில்லை. அடையாளம் தெரியாத உடல்கள்தான் அங்கு புதைக்கப்பட்டுள்ளன என்பது தெரிகிறது.
ராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டு பலியான பிரிவினைவாதிகளின் கல்லறைகளாக அவை இருக்கலாம். கடந்த 1989-ம் ஆண்டு முதல் காஷ்மீர் டெல்லியின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் பல போராட்டங்கள் நடந்துள்ளன. பிரிவினைவாதிகள் தொடங்கிய அந்த போராட்டம் இதுவரை ஓயவில்லை. ராணுவம் மற்றும் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இதுவரை 50 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் ஆவார்கள்.
காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் பதவி உயர்வுக்கும், பரிசுகளுக்கும் ஆசைப்பட்டு, அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொன்று விட்டு தீவிரவாதிகள் என முத்திரை குத்திவிடுகின்றனர். துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பொய்யான தகவலை வெளியிடுகின்றனர் என்று பொதுமக்கள் எங்களிடம் குற்றம் சாட்டினர்.
பிரிவினை போராட்டம் தொடங்கியது முதல் சுமார் 20 ஆண்டுகளில் 10 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டதாகவும், அவர்களில் பலர் கல்லறைகளாக காட்சி அளிக்கலாம் என்றும், காணாமல் போன நபர்களின் பெற்றோர்கள் சங்கம் தெரிவிக்கிறது. எனவே அடையாளம் இடப்படாத கல்லறைகள் அப்பாவி பொதுமக்களாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அடையாளம் தெரியாத கல்லறைகள் குறித்து விசாரணை நடத்துமாறு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் இந்திய அரசை மீண்டும் வலியுறுத்தி இருக்கிறது.

No comments:

Post a Comment

UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM