Wednesday, September 21, 2011

சாத்தானின் போலி உண்ணாவிரதம்!

நரேந்திர மோடி என்கிற மனிதகுல விரோதி, மனிதாபிமானம் இல்லாத மிருகம் 2002-ம் ஆண்டில் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரத்தில் ஹிந்து பயங்கரவாதிகளால் 5000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். அச்சமயம் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியினரின் ஆட்சி மத்தியில் நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் ஒரே ஒரு மிதவாத தலைவர் திரு. வாஜ்பாய் ஆவார். சுருங்கச்சொன்னால் தீவிரவாதிகளுக்கு மத்தியில் ஒரு மிதவாதி. குஜராத்தில் பயங்கரவாதி மோடி தலைமையில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான மதகலவரத்தையும் அதை தொடர்ந்து நடைபெற்ற துயரமான சம்பவங்களையும் நினைத்து மனம் வருந்திய பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதல்வர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதம் இப்போது வெளியே வந்து கொலைகாரன் மோடியை துரத்துகிறது.

இப்போது 9 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த கடிதம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி வெளி கொண்டுவர பட்டுள்ளது. அந்த கடிதத்தில் வாஜ்பாய் கூறியிருப்பதாவது குஜராத்தில் நடைபெற்ற கலவரமும், அதைத் தொடர்ந்து நடந்த துயரச் சம்பவங்களும் என்னை கடும் மனவேதனைக் குள்ளக்கி உள்ளது. குஜராத்தில் இருந்து எங்களுக்கு புகார்கள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன. அங்கு சிறுபான்மை மக்கள் உயிர் வாழ்வது கேள்விக்குறியாகி விட்டது, கலவரத்தை நீங்களே (மோடி) முன்னின்று நடத்துவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன, அங்கு என்ன நடக்கிறது, உங்களுக்கு என்னவிதமான உதவிகள் தேவை என்னிடம் கேளுங்கள், உடனே அதை மத்திய அரசு செய்யும், சிறுபான்மையினரின் உயிர்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு இந்த நாட்டில் வாழ முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டு விட கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

சிந்திக்கவும்: அமைதி, ஒற்றுமை, மதநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி இந்த ஹிந்துத்துவா சாத்தான் வேதம் ஓதுகிறது. வாஜ்பாயின் கடிதம் வெளிவந்திருக்கும் இந்த வேளையில் மோடியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமித்து போகாமல் இருக்க இந்த போலி உண்ணாவிரதம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. வாஜ்பேய்க்கு அடுத்து பாரதிய ஜனதாவில் பெயர் சொல்லும் அளவுக்கு முக்கிய தலைவர்கள் யாரும் இல்லை என்பதால் பயங்கரவாதி மோடி முன்மொழியப்பட்டு வருகிறார்.

மேலும் மோடி குஜராத்தில் பண்ணிய கலவரத்தால் பாரதியஜனதா கட்சி மீண்டும் மத்தியின் ஆட்சியை பிடிக்கும் கனவு நினைவாகமலே இருந்து வருகின்றது.  இது இரண்டையும் ஒரே நேரத்தில் சரிசெய்யவே இந்த போலி உண்ணாவிரதம். என்று எது போன்ற பயங்கரவாதிகள் தண்டிக்கப் படுகிரார்களே அன்றே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் இல்லையேல் இந்தியாவை பாதுகாக்க யாராலும் முடியாது.

No comments:

Post a Comment

UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM