விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குர்நூல் மாவட்டம் அதொனியில் மதக்கலவரம் வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் பன்னிரெண்டு பேர் படுகாயமுற்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் 20 காவலர்களும் இதில் அடக்கம்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊர்வலம் சென்றவர்கள் கஜிபுராவில் உள்ள மதினா மஸ்ஜித் வழியாக மேளதாளம் மற்றும் ஆட்டம் பாட்டத்துடன் சென்றுள்ளனர். லுஹர் தொழுகை நடந்துகொண்டிருந்த நேரம் ஆதலால் முஸ்லிம்கள் மேளதாள சத்தத்தை சிறிது தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் ஊர்வலம் சென்றவர்களோ மஸ்ஜிதின் மீது கல் எரிந்ததுடன் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கலவரகாரர்கள் மஸ்ஜிதுல் நுழைந்து தீ வைக்க முயற்சித்துள்ளனர். மேலும் பள்ளியின் மினாராக்களை சேதப்படுத்தி உள்ளனர். இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிர் இழந்தனர். மேலும் முஸ்லிம் வீட்டினுள் புகுந்து சமையல் எரிவாயு சிலிண்டரை வெடிக்கச் செயததுடன் முஸ்லிம்களுக்கு சொந்தமான 10 லாரிகளையும் தீக்கிரையாக்கினர்.
மேலும் சியாசாத் இணையதள நிருபர் சிராஜுதீன் சம்பவ இடத்திற்கு சென்று செய்தி சேகரித்து கொண்டிருந்தார். அவருடைய இருசக்கர வாகனமும் கேமராவும் தீக்கிரையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சம்பவம் குறித்து உள்ளூர்வாசியான அலி ஹஸ்மி இது ஒரு திட்டமிட்ட கலவரம் எனக்கூறினார்.
கலவரத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும் கலவரத்தை நிறுத்த இயலவில்லை எனவே போலீசார் வானத்தை நோக்கி சுட்டு கலவரத்தை நிறுத்தினர். மேலும் அங்கு மூன்று நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.

No comments:
Post a Comment
UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM