Thursday, September 1, 2011

ஆரியர்கள் கையில் சிக்கித்தவிக்கும் தமிழகம்!

ஒருவகையாக முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு வழங்கப் பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றுமாறு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை எதிர்த்து அரசியல் கோமாளியும் பார்ப்பன ஹிந்துத்துவா சுப்பிரமணிய சுவாமி
கண்டனம் தெரிவித்துள்ளார். இது மோசமான முன்னுதாரணம் என்று கூறினார்.
இந்து முன்னணி பயங்கரவாதி இராம கோபாலன் மூவர் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்தது தவறு என்று பகிரங்கமாக பேசியும், எழுதியும் வருகிறார்.
காஞ்சிபுரத்தில் தீக்குளித்த செங்கொடியின் தியாகத்தை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்டும், தூக்கு தண்டனைக்கு எதிராக தமிழகத்தில் நடந்த போராட்டங்களை பற்றி செய்தி வெளியிடாமலும் பார்பன ஹிந்துத்துவா நாளேடான தினமலர், தினமணி தங்கள் அரிப்பை தீர்த்துகொண்டன.
ஹிந்துதுவாவின் இறக்குமதியான அன்னா ஹசாரேயின் போராட்டங்களை பெரும் செய்தியாக்கி பரபரப்பை உண்டாக்கிய தினமணி, தினமலர், இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகள் தமிழர்களின் எழுச்சியை திட்டமிட்டு மறைத்தன, தமிழர்களுக்காக தீக்குளித்த வீர நங்கை செங்கொடியின் தியாகத்தை திட்டமிட்டு கொட்சைபடுத்தின.
தேர்தலில் நேரத்தில் ஈழத்தமிழர்கள் மீது திடீர் பாசம் கொண்டது போல் நடித்த பாரதிய ஜனதா கட்சி, ஆர்பாட்டங்கள் அனல் பறந்தன, தேர்தல் முடிந்தது தமிழகத்தில் இவர்களின் ஹிந்துத்துவா அரசியல் பலிக்கவில்லை என்றதும் இப்பொது தூக்கு தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கூச்சல் போடுகிறார்கள்.
ஹிந்துத்துவாவின் தீவிர ஆதரவாளரான துக்ளக் ஆசிரியர் சோ தூக்கு தண்டனைக்கு எதிரான போராட்டங்களை இயன்ற அளவு கொட்ச்சைப்படுத்தி எழுதியும் பேசியும் வருகிறார். இப்படியாக கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய பார்ப்பன கூட்டங்கள் இன்னும் தமிழகத்தை ஆளுகின்றன என்பதே உண்மை. இவர்களை அடக்க ஒரு பெரியார் போதாது ஆயிரம் பெரியார்கள் வேண்டும்.

No comments:

Post a Comment

UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM