Thursday, June 16, 2011

மோடியை ஆதரிக்கும் ஹிந்தி  திரைப்பட  இசை இயக்குனரும், பரேல்வி உலமாவும்

By TCN Special Corespondent,

அஹ்மதாபாத்: தேவ்பந்தின் தலைமை ஆசிரியர் மௌலானா குலாம் முஹம்மத் வஷ்டான்வியும், பிரபல தொழிலதிபர் ஜாபார் சரேஷ்வாலாவும் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை ஆதரித்து அறிக்கைகள் வெளியிட்டு பரபரப்பு அடங்குவதற்குள் இப்பட்டியலில் மீண்டும் சிலர் இணைந்துள்ளனர். அந்த புதுமுகங்கள் ஹிந்தி திரைப்பட இசை அமைப்பாளர் இஸ்மாயீல் தர்பாரும், பரேல்வி உலமா அப்துல் சத்தார் ஹம்தானியும் ஆவர். இவர்கள் மோடியின் "வளர்ச்சித் திட்டங்களையும், தீவிரவாத எதிர்ப்புக் கொள்கைகளையும்" ஆதரிக்கின்றனர்.

தர்பார் அரசியலில் நுழைந்து சாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருக்கிறார். டிசம்பர் 2012 -இல் நடக்கவிருக்கும் தேர்தலில் சூரத்திலிருந்து போட்டியிடுவதற்குண்டான எண்ணத்தோடு இருக்கிறார். ஹம்தாணி தன்னுடைய அரசியல் பிரவேசத்தைப் பற்றி இன்னும் தெளிவுபடுத்தவில்லை. 
தர்பார் சமீபத்தில் பிஜேபி தலைவர் நிதின் கட்கரியை நாக்பூரில் சந்தித்து தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து பேசியிருக்கிறார். பிறகு நாக்பூரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், 2002 -இல் நடந்த கலவரங்களை மறந்துவிடுமாறும், குஜராத்தில் (நரமாமிச) மோடியை ஆதரிக்க வேண்டும் என்றும் முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆச்சரியம் என்னவென்றால், 1993 -இல் போர்பந்தரிலுள்ள கோசபராவில் வெடிமருந்துகளையும், துப்பாக்கிகளையும் ஹம்தாணி கொள்முதல் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டவர். அவைகளை மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு தாவூத் இப்ராஹீமும், அவரின் கூட்டாளிகளும் பயன்படுத்தினர் என்றும் கூறப்பட்டது.

சுமார் 60 வயதைக் கடந்துள்ள ஹம்தாணி குஜராத் மாநில பரேல்வி முஸ்லிம்களிடையே நல்ல செல்வாக்குப் பெற்றவர். 
 
ஹம்தாநியுடன் கைது செய்யப்பட்ட 21 பேரும் தடா (Terrorist and Disruptive Activities Act) சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பிறகு நடந்த விசாரணையில் போதிய சாட்சியமின்றி குற்றம் நிரூபிக்க முடியாததால் விடுதலை செய்யப்பட்டனர்.
 
காங்கிரஸின் ஆதரவாளராக இருந்து வந்த ஹம்தாணி, சிறையிலிருந்து விடுதலையான பிறகு அதற்கு நேர் எதிரான நிலையில் இருக்கிறார். அவர் இதுவரை வேறு எந்தக் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ளாவிட்டாலும், போர்பந்தரில் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மோடியை புகழ்ந்து தள்ளியுள்ளார். மேலும், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரான குஜராத்தைச் சேர்ந்த அஹமத் படேல்-ஐ "தீவிரவாதிகளின் ஆதரவாளர்" என்றும் சாடியுள்ளார். 
 தப்லீக் ஜமாஅத்-ஐ தீவிரமாக எதிர்க்கும் ஹம்தாணி, அதனை தீவிரவாதிகளை ஆதரிக்கும் அமைப்பு என்கிறார். அஹமத் படேல் ஒரு தப்லீக்-இன் ஆதரவாளர். எனவே அதன் உருவாக்கமான அவரும் ஒரு தீவிரவாதியே என்கிறார்.
 
மோடியைக் குறித்து ஹம்தாணி கூறுவதாவது: "மோடி தீவிரவாதத்தை எதிர்த்து பலத்தைப் பிரயோகிக்கிறார்." ஆனால், பொதுவான முஸ்லிம்கள் 2002 -இல் நடந்த கலவரத்துக்கும், அதில் 2000 -க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், பல நூறு கோடி மதிப்புள்ள முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப் பட்டதற்கும் மோடியே காரணம் என்று தெளிவாகச் சொல்கிறார்கள்.
 
ஹம்தானியால் 3 மூத்த IPS அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் சிக்கியிருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிட வேண்டியதாகும். அதுல் கர்வால், H P சிங்க், சதீஸ் வெர்மா ஆகியோரே அந்த 3 பேராவர். அவர்கள் போர்பந்தரில் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஹம்தானிக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஜூன் 11 அன்று குஜராத் அரசால் அறிவிக்கை அனுப்பப் பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் யாட்டின் ஓஜா அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட போது நலன் வழக்கினை குஜராத் உயர்நீதி மன்றம் விசாரித்து உத்தரவிட்ட பிறகே இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இது போன்ற நடவடிக்கைகள் மோடிக்கு ஆதரவாக இருப்பது போல் தோன்றினாலும்,  அவர் இதன் மூலம் தன்னை திறமையான தலைவரைப் போல் காட்டிக்கொண்டு, ஒரு வேலை மத்தியில் பிஜேபி ஆட்சி அமைத்தால் பிரதமராகலாம் என்று கனவு காண்கிறார். ஆனால், இதில் மிகவும் நெருடலாக இருப்பது 2002 கலவரம் தான்.

நன்றி: TwoCircles.net

No comments:

Post a Comment

UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM