Thursday, June 23, 2011

போர்பெஸ்கஞ் படுகொலையில் சிபிஐ விசாரணை கோரி எஸ்.டி.பி.ஐ. மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகள் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி

By Mumtaz Alam Falahi, TwoCircles.net,

பாட்னா: போர்பெஸ்கஞ் போலீஸ் துப்பாக்கி சூட்டைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகளால் நடத்தப்பட்ட முதல் எதிர்ப்புப் பேரணி இது தான். இதில் அரை டஜனுக்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்து கொண்டன. பேரணியில் கலந்து கொண்டவர்கள் முதல்வர் நிதீஷ் குமாருக்கு எதிராகவும், துணை முதல்வரும், பிஜேபி தலைவருமான சுசில் குமார் மோடிக்கு எதிராகவும் கடுமையான கோசங்களை எழுப்பிக்கொண்டே சென்றனர். அவர்கள் பீகாரில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தவும், துப்பாக்கி சூட்டில் 6  அப்பாவி முஸ்லிம்கள் பலியானதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
 





















நேற்று (ஜூன் 22) மதியம் 2  மணிக்கு காந்தி மைதானத்திலிருந்து பேரணி துவங்கியபோது கலந்து கொண்டவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பேரணி கவர்னர் மாளிகையை நோக்கி சென்றது. இருந்தபோதிலும், செல்லும் வழியில் ஏராளமான மக்கள் இப்பேரணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இது போன்ற பேரணியை நடத்தி முடிக்க முஸ்லிம் அமைப்புகளுக்கு 20 நாட்கள் தேவையாகிவிட்டது.
பேரணியின் முடிவில், கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆளுநரின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இக்கூட்டமைப்பில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, பாரதிய மூமின் பிரண்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் சில அமைப்புகள் கலந்து கொண்டன.
 
கோரிக்கைகள்:
 
* BJP MLC அசோக் அகர்வால், அவரின் மகன் சௌரப் அகர்வால், SP, அராரிய கரிமா மாலிக், SDO அசோக் சௌதரி ஆகியோரைக் கைது செய்து, பிரிவு 302-இன் கீழ் வழக்குப் பதிய வேண்டும்.
* போர்பெஸ்கஞ் கிராமத்தின் பழைய பாதையை மீண்டும் திறந்து விட வேண்டும்.
* கிராமவாசிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலத்தை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
* இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்.
 

No comments:

Post a Comment

UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM