Wednesday, April 20, 2011

முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளை தனித் தொகுதிகளாக (RESERVED FOR SC's) அறிவிப்பது ஏன்?

இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிப்பது போன்றதாகும். தனித்தொகுதிகளை ஒரு சமூகத்திற்காக (தவறான முறையில்) ஒதுக்கீடு செய்வதால் வேறு ஒரு சமூகம் ஒடுக்கப்படுகிறது. நம் நாட்டில் பட்டியல் இனத்தவருக்கு தேர்தலில் சில தொகுதிகளை ஒதுக்கப் படுகிறது. இது சட்ட ரீதியான உரிமையாகும். ஆனால் இது சட்ட மன்றங்களிலும், நாடாளு மன்றங்களிலும் முஸ்லிம்கள் தனது பங்களிப்பைச் செலுத்த முடியாமல் செய்து விடுகிறது. முஸ்லிம்களை பட்டியல் இனத்தில் சேர்க்கப்படுவதை சட்டம் தடை செய்கிறது. நாடு முழுவதும் ஏராளமான சட்ட மன்றத் தொகுதிகளிலும், நாடாளு மன்றத் தொகுதிகளிலும் முஸ்லிம்கள், பட்டியல் இனத்தவரை (தலித்துகள்) விட அதிகமாக இருந்தும் அத்தொகுதிகள் பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப் படுகிறது. பட்டியல் இனத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பல தொகுதிகள் பொதுத் தொகுதிகளாக இருப்பதைக் காணும் ஒருவரால், முஸ்லிம்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள் எனும் குற்றச்சாட்டை உறுதியாக நம்ப முடியும்.

ஆறு வருடங்களுக்கு முன் இப்பிரச்சினை சச்சார் கமிட்டியால் சுட்டிக் காட்டப் பட்டது.

 "பட்டியல் இனத்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகுந்தும் காணப் படுகிற ஏராளமான தொகுதிகள் பட்டியல் இனத்தவர்களுக்காக ஒதுக்கப் பட்டுள்ளதையும் சச்சார் கமிட்டி அறிக்கையில் கோடிட்டுக் காட்டியிருந்தது. மாறாக, முஸ்லிம்கள் குறைவாகவும், தலித்துகளின் எண்ணிக்கை மிகுந்தும் காணப் படுகிற ஏராளமான தொகுதிகள் பொதுத் தொகுதிகளாக விடப்பட்டுள்ளதையும்" சச்சார் கமிட்டி தனது அறிக்கையில் பதிவு செய்திருந்தது.

முஸ்லிம்கள் அதிகமாக வாழக் கூடிய சட்ட மன்றத் தொகுதிகளை தனித் தொகுதிகளாக அறிவித்து, தலித்துகளால் மட்டுமே அத்தொகுதிகளில் போட்டியிட முடியும் என்பது தான் கமிட்டியின் கவனத்தை ஈர்த்தது. இது போன்ற நடவடிக்கைகளால் முஸ்லிம்களின் அரசியல் பங்களிப்பு திட்டமிட்டு மறுக்கப் படுகிறது என்ற விவாதம் தவிர்க்க முடியாததாகிறது.

சச்சார் கமிட்டி இன்னும் ஆழமாக இப்பிரச்சினை குறித்து ஆய்வு செய்தது. ஆனால் தனித் தொகுதி குறித்த பிரச்சினையில் வாக்காளர்களின் பட்டியலை ஆராய்ந்து இதனை உறுதிப் படுத்த போதுமான அவகாசம் இல்லை. "SC -களுக்காக உதிரப் பிரதேசம், பீஹார், மேற்கு வங்காளத்தில் ஒதுக்கப் பட்டுள்ள  தனித் தொகுதிகளை நாம் ஆய்வு செய்ததில் குற்றச்சாட்டு உறுதியாகிறது" என்கிறது கமிட்டியின் அறிக்கை.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தொகுதிகள் தனித்தொகுதிகளாகவும், தலித்துகள் அதிகமாக வாழும் தொகுதிகள் பொதுத்தொகுதி களாகவும் உள்ளதை விளக்கும் பட்டியல்:-

சட்ட மன்ற தொகுதி
மொத்த மக்கட் தொகை 
முஸ்லிம் களின் எண்ணிக்கை
தலித்து களின் எண்ணிக்கை 
ST 's
SC 's  % 
முஸ்லிம் களின் % 
மேற்கு வங்காளம் : அறிவிக்கப் பட்டுள்ள தனித் தொகுதிகள் 
Basanti
278592
114736
107602
17462
38.6
41.2
Rajarhat
145381
60108
52233
938
35.9
41.3
Nanoor
193775
64827
61803
3834
31.9
33.5
Kulpi
242752
88230
77380
141
31.9
36.3
Ketugram - I
145859
64975
39011
582
26.7
44.5
Sankrail
290924
92942
73191
1761
25.2
31.9
Keshpur
288489
76866
72536
17012
25.1
26.6
Khargram
234780
120557
55320
1918
23.6
51.3
Sagardighi
252293
156870
44992
16882
17.8
62.2
Kaliganj
290957
161705
49349
1447
17.0
55.6
மேற்கு வங்காளம் : பொதுத் தொகுதிகள் 
Sitai
96347
26491
64869
8
67.3
27.5
Haldibari
93867
30036
58070
254
61.9
32.0
Jalpaiguri
280927
40519
170394
16774
60.7
14.4
Kaliaganj
190019
39334
114922
8656
60.5
20.7
Khejuri - II
117438
8306
66658
819
56.8
7.1
Kharibari
88230
4128
44863
17099
50.8
4.7
Tufanganj – II
167455
22083
84790
3176
50.6
13.2
Bamangola
127252
11287
63459
25083
49.9
8.9
Gaighata
300588
18841
144293
4401
48.0
6.3
Bongaon
344044
69777
161918
10245
47.1
20.3

மத்திய தேர்தல் கமிசனின் 2004-ஆம் ஆண்டின் அறிக்கையையும், 2001 -ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது.

தலித்துகள் அதிகமுள்ள தொகுதிகளை தனித்தொகுதிகளாக அறிவிப்பதே சரியான நீதியாகும். முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளை முஸ்லிம்களுக்கு மட்டுமே ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். குறைந்த பட்சம் அவைகளை பொதுத் தொகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்பதே சச்சார் கமிசனின் முன் உள்ள வேண்டுகோள். தொகுதிகளை வரையறை செய்வதில் பகுத்தறிவு முறையை பயன்படுத்தி பாரபட்சம் காட்டாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதன் மூலம் சிறுபான்மையினர் சட்ட மன்றங்களிலும், பாராளு மன்றங்களிலும் தனது பங்களிப்பைச் செலுத்த முடியும். மேலும், தேவையான திட்டங்களை வகுத்து முஸ்லிம்களை அரசியலில் பங்கெடுக்கச் செய்ய வேண்டும் எனவும் சச்சார் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. அரசு அந்த அறிக்கையை கிடப்பில் போட்டு முஸ்லிம்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறது.

நன்றி: By Mumtaz Alam Falahi, TwoCircles.net,

No comments:

Post a Comment

UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM