Monday, April 18, 2011

ஜமாஅத்தே இஸ்லாமி இன்று அரசியல் கட்சியை துவக்குகிறது, 2012 உ.பி. தேர்தலில் போட்டி

லக்னோ: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்-இன் புதிய பரிணாமமாக அரசியல் கட்சியை இன்று துவங்க எல்லா வேலைகளும் தயார். புதிய கட்சியின் பெயர் வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா (WELFARE PARTY OF INDIA - WPI ). உத்திர பிரதேசத்தில் 2012 -இல் நடைபெறவிருக்கும் சட்ட மன்றத் தேர்தலில் தனது முதல் போட்டியைத் துவக்கத் திட்டமிட்டு உள்ளது.

WPI -இன் ஒருங்கிணைப்பாளர் SQR இலியாஸ் அவர்கள் கூறியதாவது: மகாராஷ்டிரா-விலுள்ள ஒவ்ரங்கபாத்-ஐ சேர்ந்த முஜ்தபா பாரூக்கி அவர்கள் (JIH -இன் அரசியல் பிரிவு செயலாளர்) முன்னிலையில் டெல்லியில் இன்று கட்சி துவக்கப் படுகிறது. இவர் தான் கட்சியின் தேசியத் தலைவராகவும் செயல்படுவார். முஸ்லிம்களின் சமூக, மத இயக்கம் தேர்தல் அரசியலில் பங்கேற்பதாக அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்ள கட்சியின் தேவை இன்றியமையாதது. JIH -இன் பல்வேறு கிளைகளிலிருந்தும் பரிந்துரைக்கப்பட்ட அரசியல் பிரிவு உயர் மட்டக் குழுவால் விவாதிக்கப்பட்டு திங்கள் கிழமை இன்று துவங்குவதென முடிவெடுத்தோம் என்று கூறினார் இலியாஸ். மேலும் அவர் சொன்னார்: இது முஸ்லிம்களின் கட்சியாக மட்டுமின்றி பிற மத மக்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். பிற கட்சியை சேர்ந்த தகுதி வாய்ந்த தலைவர்களையும் இணைத்துக்கொள்ள தொடர்பு கொண்டு வருகிறோம். முன்னாள் BSP MP இலியாஸ் அஜ்மி அவர்கள் WPI -இல் இணைந்துள்ளார்.

புதிய WPI -இல் 5 துணைத் தலைவர்களும், 4 பொதுச் செயலாளர்களும் நியமிக்கப்படுவார்கள். கட்சி செயல்படத் துவங்குகின்ற வரை நான் ஒருங்கினைப்பாளராக இருப்பேன். பொறுப்பாளர்களின் பட்டியலை கட்சியின் உயர்மட்டக் குழுவிற்கு அனுப்பிவைக்கப் பட்ட பிறகு விரைவில் பொறுப்பாளர்கள் அறிவிக்கப் படுவார்கள் என்றார் இலியாஸ். இவர் பாபரி மஸ்ஜித் கமிட்டியின் ஆல் இந்திய முஸ்லிம் பர்சனல் லா போர்டு AIMPLB -இன் செயற்குழு உறுப்பினராகவும், ஒருங்கினைப்பாளராகவும் செயல்படுகிறார்.
 வரவிருக்கின்ற உ.பி.தேர்தலில் தன்னுடைய வேட்பாளர்களை களமிறக்க விருக்கும்   WPI, பிற கட்சிகளோடு பேசவும் தயாராக இருக்கிறது. முதற்கட்டமாக எந்த தேசியக்கட்சியோடும் பேச விரும்பவில்லை. சிறிய கட்சிகளோடு பேசி பலமான கூட்டணியாக உ.பி.யில் உருவாக்குவோம். அரசியலில் இருக்கும் யாரும் செய்யக்கூடிய வேலையைத் தான் நாங்களும் செய்கிறோம் என்று கூறினார் இலியாஸ். இவ்வருட பிப்ரவரியில் ஜமாஅத், கட்சியின் கொள்கைகளை வெளியிட்டது. அதில் கட்சி, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை இணைந்து கொள்ள வரவேற்கிறது.
செய்யத் அபுல் அஹ்லா மௌதூதி அவர்களின் தலைமையில் 1941 , ஆகஸ்ட் 26 அன்று லாஹூரில் JIH துவக்கப்பட்டது. 50 லட்சம் உறுப்பினர்களை கொண்டுள்ளதாக பெருமைப் பட்டுக் கொள்ளும் JIH -ன் மாணவர் பிரிவாக ஸ்டூடன்ட் இஸ்லாமிக் ஆர்கனைசேசன் (SIO ) செயல்படுகிறது.

வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த பன்னூலாசிரியரும், புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞ்சருமான  மௌலானா செய்யத் ஜலாலுதீன் உமரி அவர்கள் தற்போதைய தலைவராக செயல்படுகிறார்கள்.

ஜமாத்தின் அரசியல் பிரவேசம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் அரசியல் கட்சியான சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா-விற்கு போட்டியான கட்சியாகவே மக்களால் பார்க்கப்படுகிறது. துவங்கி இரண்டே ஆண்டுகளில் 12 -க்கும் மேற்பட்ட மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.


(With inputs from TCN Staff Reporters in Delhi and Kerala)

By Mohd Faisal Fareed, TwoCircles.net,

No comments:

Post a Comment

UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM