Sunday, April 17, 2011

எங்களின் துயரத்தைப் போக்க எந்த முஸ்லிம் தலைவர்களும் இல்லை: சென்னை வாழ் குடிசைவாசிகள்  

சென்னை: தமிழகத்தின் தலைநகரம் சென்னையின் புறநகர்ப் பகுதியான புளியந்தோப்பில் வசித்து வருபவர் தான் ரபீக். 

மூன்று விதமான வேலைகளைச் செய்தும் அவரால் தன்னுடைய பொருளாதாரத் தேவையை நிறைவு செய்ய முடிவதில்லை. குடும்பத்தில் மூன்று மகள்கள், ஒரு மகன், மனைவி சக்கீனா உட்பட மொத்தம் ஆறு பேர். பகல் நேரங்களில் துணியை (அயன்) தேய்த்துக் கொடுக்கும் வேலையையும், மாலையில் காவல் காக்கும் வேலையையும், வாரத்தில் மூன்று நாட்களுக்கு ஐஸ் விற்கும் வேலையையும் செய்கிறார். அவருடைய வருவாயைப் பற்றி விசாரித்தால் நல்லதொரு வேலையை எதிர்பார்க்கிறார். 

இதுபோன்று பசியிலும், பட்டினியிலும் வாடுவது இவர் மட்டுமல்ல. சலீம், புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர். பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். தனித்து விடப்பட்டவர் மீண்டும் தன்னுடைய ஹிந்து சகோதரியிடமே அடைக்கலம் புகுந்துள்ளார். நோய் தாக்கப் பட்டதால் தன்னுடைய கண்டக்டர் பணியை விட்டுவிட நேர்ந்தது. ஓய்வூதியம் எதையும் பெறமுடியாமல் ஹிந்து சகோதரியின் தயவில் வாழ வேண்டியதாகிவிட்டது. அவரோ தன் குடும்பத்தில் ஏழு பேரைச் சிரமத்துடன் பராமரித்து வருகிறார்.

வட சென்னையிலுள்ள புளியந்தோப்பு, பெரம்பூர், தாதாஷாமக்கான், பென்சனர் சந்து, லால்குண்டா, வண்ணாரப் பேட்டை போன்ற பகுதிகளுக்குச் சென்றால் இதே போன்று வறுமையிலும் கண்ணியமாக வாழும் பலரை நாம் காண முடியும்.






சலீம், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு தனது ஹிந்து சகோதரியின் வீட்டில் 
 இது போன்ற குடிசைப் பகுதிகளில் வறுமையிலும், சுகாதாரமின்றியும் வாழும் மக்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் தான். வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவதால் வருமானமின்றியும், பாதுகாப்பான வீடுகளின்றியும், சுகாதாரமற்ற சுற்றுப்புறங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள் கிடைக்கப் பெறாமலும் வாழ்ந்து வருகின்றனர். தரமான மருத்துவ வசதியும், கல்வி கற்கும் வாய்ப்புகளும் கிடைப்பதில்லை.





முஸ்லிம்களின்  சென்னை குடிசைப் பகுதி 
குறுகலான சாலையும், தெருவிளக்கு பராமரிப்பின்றியும் விடப்பட்டுள்ள இப்பகுதிகளின் நிலை குறித்து சட்ட சபை தேர்தல் சமயத்தில் மட்டுமே திமுக-விற்கு நினைவு வருகிறது. ஏன் இந்த முஸ்லிம்கள் கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்ட பல்வேறு  வளர்ச்சித் திட்டங்களில் புறக்கணிக்கப் பட்டார்கள்? என்று யாராலும் கேட்காமல் இருக்க முடிவதில்லை.






TNTJ-வின் கொடி வரையப்பட்டுள்ள சென்னை குடிசைப் பகுதி
 
மிகவும் வருத்தத்திற்குரியது என்னவென்றால் சிங்காரச் சென்னையின் புறநகரான இப்பகுதிகளில் தான் 20-க்கும் குறையாத முஸ்லிம் அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத், இந்திய தேசிய லீக், இப்படி பட்டியல் நீள்கிறது. நாங்கள் தான் முஸ்லிம்களின் துயர் துடைக்க போராடுபவர்கள் என்று கூறிக் கொள்ளும் இவர்களைப் பற்றி இப்பகுதியில் ஏழ்மையிலும், நிராதரவற்றும் வாழும் முஸ்லிம்களிடம் கேட்டால், எந்த கட்சியின் பொறுப்பாளர்களும் எங்களை இது வரை சந்திக்கவுமில்லை, எந்த உதவியும் செய்யவுமில்லை என்ற கவலை தோய்ந்த பதில் தான் கிடைக்கிறது.







பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பிச்சை எடுக்கும் பெண், முஸ்லிம் குடிசைவாசிகள் அதிகம் வசிக்கும் பெரம்பூரில்
 
"ஆம், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் சமயத்தில் மட்டும் ஒட்டுக் கேட்டு வரும் இவர்கள் பிறகு காணாமல் போய் விடுகிறார்கள்" என்கிறார் அப்துல் சத்தார். "இந்த முஸ்லிம் அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவே ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இவர்கள்
 எல்லோரும் பதவிக்கும், பணத்திற்கும் அடிமைகள். இவர்கள் தங்களுடைய திட்டங்களில் இந்தச் சேரிப் பகுதிகளைப் பற்றி விவாதிப்பதே இல்லை. மாறாக அப்பகுதி மக்களுக்களை எப்பொழுதாவது சந்தித்து உதவிகள் செய்வது மட்டும் தான் இவர்கள் செய்யும் பெரிய பணி" என்கிறார் இக்குடிசைப் பகுதிகளுக்கு அருகில் வாழும் சமூக சேவகர் அப்துல் ரஹ்மான்.






சென்னை சேரியில் மதரசா மாணவர்கள்
 
 நடுநிலைச் சிந்தனையை முஸ்லிம்களிடையே ஏற்படுத்துவதற்கான அமைப்பின் பொதுச் செயலாளர் பைசுர் ரஹ்மான் அவர்கள் கூறும்போது, "வட சென்னையில் ஏழ்மை நிலையில் வாழும் முஸ்லிம்களின் நிலையை முன்னேறச் செய்வதில் முஸ்லிம் தலைவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள். சமூகத் தலைவர்கள் தங்களின் கவனத்தை இப்பகுதி மக்களின் மீது ஒருமுகப் படுத்துவது அவசரமான அவசியமாகும்" என்று.





சென்னை புறநகர் சேரிவாழ் முஸ்லிம்களின் நிலை
முஸ்லிம் தலைவர்களுக்கு இப்பகுதி முஸ்லிம்களின் மீதுள்ள கடமை பற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர் பாத்திமா முசப்பார் அவர்களிடம் TwoCircles.net கேட்டபோது,





சென்னை சேரியில் வாழும் ஆதரவற்ற முதியவர்
பின் தங்கிய பகுதிகளில் வாழும் முஸ்லிம்களுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சுயநலத் தலைவர்களை புறந்தள்ளி நாங்கள் பொறுப்பேற்று இருக்கிறோம். சமூகத்தைப் பற்றி அவர்கள் ஒருபோதும் கவலைப் பட்டதில்லை. விரைவில் நீங்களே மாற்றத்தைக் காண்பீர்கள் 

சென்னை சேரியில் முஸ்லிம்கள் நடமாடும் குறுகலான இருள் சூழ்ந்த சந்து
 
நன்றி: By Md. Ali, TwoCircles.net,

No comments:

Post a Comment

UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM