Friday, August 19, 2011

காந்திய வாதி நாடகமும் காவி வாதி அரேங்கேற்றமும்?

புதுடெல்லி, ஆக 17 : வலுவான லோக்பால் மசோதாவுக்காக இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்த அன்னா ஹஸாரே இன்று திடீரென அவரது வீட்டில் வைத்து கைதுச் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஹஸாரேவின் போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹஸாரே போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கைதுச் செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

ஹஸாரே குழுவைச் சார்ந்த அரவிந்த் கெஜ்ரவால் உள்ளிட்டோரும் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஹஸாரேவின் கைது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தான் கைதுச் செய்யப்பட்டாலும் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வேன் என ஹஸாரே ஏற்கனவே அறிவித்திருந்தார். அன்னா ஹஸாரே உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்திருந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

** புதிய முகமூடியுடன் இந்துத்துவா மதவாதி சக்திகள், பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்ற ரூபத்தில் புதிய உண்ணாவிரத நாடகங்களை தலைநகர் டெல்லியில் அரங்கேற்றுகின்றன. தொலைக்காட்சி ஊடகங்கள், ஏடுகள் இவற்றுக்கு அபார விளம்பரங்கள் தருவதோடு, இப்படி இரட்டை வேடதாரிகள் “தூய யோவான்களாகவும் சித்திரித்து, படித்த பாமரர்களையும் ஏமாற்றிடத் துணை போகின்றன ஹிந்துத்துவா சக்திகள்! (மாட்டு மூத்திரம் குடிக்கும் பார்ப்பன பத்திரிகைகள்)

அரசியலைத் தூய்மைப்படுத்தும் முன்பு இவர்கள் சார்ந்த ஆன்மீகம், மதங்களில் அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, மோசடிகளைத் தடுத்து நிறுத்த முதலில் உழைக்க வேண்டாமா? அப்பாவி மக்களைக் கவருவதற்காக கறுப்புப் பணம், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை கொண்டு வருதல் போன்ற பல்வேறு திட்டங்களை முன் வைத்து மத்திய அரசாங்கத்தை “பயமுறுத்திட” இப்படி ஒரு உண்ணாவிரத நாடகத்தைத் துவக்கி, ஊடகங்கள் ஊதிப் பெருக்குவதால் நடத்திட முன் வந்துள்ளனர்; பாபா ராமதேவ், அன்னாஹசாரே போன்றவர்கள் புதிய அவதாரங்கள்!
இதில் பெரிதாக ஒன்றுமில்லை, ஊழல் ஒழிப்பு என்கிற நாடகம் இதை அரங்கேற்றுவது பி ஜே பி, ஆர் எஸ் எஸ், போன்ற காவி கட்சிகள், மக்கள் இதை புரிந்து கொண்டு இப்போராட்டங்களை புறக்கணிக்க வேண்டும்., மொத்தத்தில் காவியை அரியணையில் அமர்த்தும் நாடகம். ** 

No comments:

Post a Comment

UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM