Wednesday, August 24, 2011

பாபர் மசூதி இடிப்பில் கரசேவர்களுக்கு ஹவாலா பணம் பயன் படுத்தப்பட்டது சி.பி.ஐ விசாரணையில் புதிய திருப்பம் !!!

புதுடெல்லி, ஆக. 22- உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் உத்தரபிரதேசத்தில் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையே பாபர் மசூதி இடிப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. கரசேவகர்களை அழைத்து வந்தது
யார்? மசூதியை இடிக்க திட்டமிட்டது எப்படி? என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தகவல்கள் சேகரித்தனர்.

சுமார் 20 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. வரும் 15-ந் தேதி இந்த விசாரணை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமலாக்கப் பிரிவு மற்றும் வருமான வரித்துறைகளின் ஒத்துழைப்பையும் பெற்றுள்ள சி.பி.ஐ, விரைவில் பாபர் மசூதி இடிப்பு பின்னணியில் உள்ள சில தகவல்களை வெளியிடும் என்று தெரிகிறது.

குறிப்பாக பாபர் மசூதி இடிப்புக்கு ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டு இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. எந்த நாட்டில் இருந்து யார் மூலம் அந்த ஹவாலா பணம் வந்தது? மசூதியை இடித்த கரசேவகர்களுக்கு அந்த பணம் எப்படி பட்டுவாடா செய்யப்பட்டது? என்பன போன்ற தகவல்களை சி.பி.ஐ. கசியவிடும் என்று தெரிகிறது.

சி.பி.ஐ. தன் முதல் தகவல் அறிக்கையில் வாஜ்பாய், அத்வானி, உமாபாரதி, கல்யாண்சிங், உள்பட 48 பேர் பெயரை குறிப்பிட்டுள்ளது. லிபரன் கமிஷன் 68 பேரின் பெயர்களை கூறியுள்ளது. அவர்களை பற்றி மீண்டும் சி.பி.ஐ. தகவல்களை திரட்டுவதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM