Wednesday, May 18, 2011

நேஷனல் விமன்ஸ் பிரண்ட் (NWF) நடத்திய கோடை கால இஸ்லாமியப் பயிற்சி முகாம்

கோயமுத்தூர்: நேஷனல் விமன்ஸ் பிரண்ட் (NWF) தேசிய அளவில் பெண்களுக்கான பேரியக்கமாக செயல்படுகிறது. மனித உரிமை மீறல்கள், பெண் அடிமைத்தனம், பெண்களுக்கான இட ஒதுக்கீடு, பெண்களுக்கு எதிரான கொடுமைகள், பெண் சிசுக்கொலை, வரதட்சனைக் கொடுமைகள், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் பெண்களை முன்னேற்றமடையச் செய்வது, பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதை எதிர்த்தும், குடும்பப் பிரச்சனைகளில் பெண்களுக்கான ஆலோசனைகள் வழங்குவது போன்ற சமூகத்தை முன்னேற்ற அனைத்து வழிகளிலும் தனது பங்களிப்பைச் செலுத்தி வருகிறது. ஆதரவற்ற பெண்களை பொருளாதாரத்தில் தன்னிறைவடைவதற்கு  சுய தொழில் தொடங்கவும் உதவி செய்கிறது. 

மேலும், மாணவிகளுக்கான கோடை கால இஸ்லாமியப் பயிற்சி முகாமையும் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.


இவ்வருடமும் கோவை கரும்புக் கடை ஆசாத் நகரிலுள்ள தாருல் ஹிக்மா பாடசாலையில் கோடை கால இஸ்லாமியப் பயிற்சி முகாம் மே 10 முதல் 15 வரை 6 நாட்கள் நடை பெற்றது. 



அதில் நபிமார்கள் வரலாறு, நபித் தோழியர் வரலாறு, தொழுகை, சொர்க்கம், நரகம், ஒழுக்கம், நயவஞ்சகர்கள், உடல் ஆரோக்கியம், தன்னம்பிக்கைப் பயிற்சி, முஸ்லிம்களின் வரலாறு, குரான் ஓதுதல், வினாடி-வினா போன்ற தலைப்புகளில் வகுப்புகள் நடத்தப் பட்டன. 



நிறைவு நாளான மே 15 அன்று நடத்தப் பட்ட பாடங்களில் இருந்து தேர்வு நடத்தப்பட்டது. கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டிகளும் நடத்தப் பட்டன.

நிறைவு விழாவில் சகோதரர் ஹாரூன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவிகளுக்கு இம்முகாமினால் பெற்றுக் கொண்ட கல்வியை எவ்வாறு வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துவது என்பது பற்றிய ஆலோசனை வழங்கினார்.

முகாமில் கலந்து கொண்ட மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கி மகிழ்வித்தனர்.



கலந்து கொண்ட அனைவரும் பெரும்பயன் பெற்றதாகவும், இம்முகாம் கோடை காலத்தில் தவறாமல் நடத்தப் பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து மகிழ்வுடன் இல்லம் திரும்பினர்.

No comments:

Post a Comment

UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM