SDPI கட்சி மட்டுமல்ல, அது ஓர் லட்சியம்: E.அபூபக்கர்
23 May 2011 - 11:19am
By Pervez Bari, TwoCircles.net,
கடந்த இரண்டு நாட்களாக பெங்களூரில் நடந்த தேசிய பிரதிநிதிகள் சந்திப்பில் SDPI -இன் தேசியத் தலைவர் E.அபூபக்கர் அவர்கள் முன்வைத்த சிந்தனைகளைத் தான் நாம் மேலே கண்டோம். ஞாயிறன்று SDPI-இன் புதிய தேசியப் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
SDPI தேசியத் தலைவர் E.அபூபக்கர் அவர்கள் பேசிய போது
தொடர்ந்து அபூபக்கர் அவர்கள் சொன்னார்கள்: "இங்கே, ஒரு விஷயத்தை மீண்டும் சொல்கிறேன், நம் நாட்டிலுள்ள முஸ்லிம்கள், தலித்துகள், ஆதிவாசிகள், இது தவிர உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்துச் செல்வதற்குண்டான தொலைநோக்குப் பார்வையும், செயற்கலமும் மிகப் போதுமான அளவில் SDPI-இடம் உள்ளது".
பெங்களூரு: "சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா என்பது கட்சியல்ல. SDPI என்பது ஒரு லட்சியமாகும். அந்த லட்சியம் என்பது, இதே மண்ணில் பிறந்து சொல்லொணா துயரங்களுக்கிடையே அவதிப்பட்ட மக்களின் மனசாட்சியாகும். இது போன்ற அமைப்புகளால் மட்டுமே மக்களின் பங்காலனாகத் திகழ முடியும். நாங்கள் நமது நாட்டுக்கான புதிய புவியியலை வரைந்து கொண்டு இருக்கிறோம். அதற்குள்ளே ஒரு புதிய சரித்திரத்தைப் படைப்பதற்காக. உண்மையான நடவடிக்கைகளை உருவாக்கி மக்களின் மனங்களில் கட்சியைப் பதிய வைப்பது தான் முக்கியமான லட்சியமாகும். அதாவது, புதிய பாதைகளையும், புதிய செயல்பாடுகளையும் திட்டமிட்டு வகுப்பது தான்".
கடந்த இரண்டு நாட்களாக பெங்களூரில் நடந்த தேசிய பிரதிநிதிகள் சந்திப்பில் SDPI -இன் தேசியத் தலைவர் E.அபூபக்கர் அவர்கள் முன்வைத்த சிந்தனைகளைத் தான் நாம் மேலே கண்டோம். ஞாயிறன்று SDPI-இன் புதிய தேசியப் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
SDPI தேசியத் தலைவர் E.அபூபக்கர் அவர்கள் பேசிய போது
இது மக்களின் கல்வி, பொருளாதாரம், சுற்றுப்புறம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியதாகும். நாங்கள் எங்களுக்கான புதிய புவியியலை வரைந்து கொண்டிருக்கிறோம். நிச்சயமாக அவைகளுக்கு வரைமுறைகள் உண்டு. அதன் எல்லைக்குள் ஹிந்து, கிறித்துவர், முஸ்லிம், சீக்கியர், பார்சிகள், ஆதிவாசிகள், தலித்துகள் மற்றுமுள்ள அனைத்து இந்தியர்களும் இருப்பார்கள். இந்தப் புதிய எல்லைக்குள் தான் நாங்கள் புதிய சரித்திரத்தைப் படைக்கப் போகிறோம். சந்தேகமே இல்லை, இது ஒரு புதிய வரலாற்று லட்சியம்".
11 மாநிலங்களில் மாநில செயற்குழுக்கள் உட்பட மொத்தம் 21 மாநிலங்களில் கட்சியின் செயல் வீரர்களைக் கொண்டதாக இச்சிறிய கட்சி உள்ளது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன் என்று சொன்னார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தல்களில் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய 3 மாநிலங்களிலும் மொத்தமாக 101 வேட்பாளர்களை மட்டும் களமிறக்கினோம். கேரளாவில் மட்டுமே 82 வேட்பாளர்களை நிறுத்தினோம். அவ்விடங்களிலெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லும் அளவில் எங்களின் பலம் உள்ளதை வெளிப்படுத்தினோம்" என்று கூறினார். பேச்சின் நிறைவாக, அவர் ஒரு விஷயத்தை வலியுறித்திச் சொன்னார். "நாங்கள் எங்களுக்கெதிராக வந்த பல சோதனைகளைச் சந்தித்தோம். அவைகள் எங்களின் இருப்பை சவால் விடும் அளவில் இருந்தன. மதச்சார்பற்றவர்களும், போலி மதச்சார்பற்றவர்களும், மதவெறியர்கள் ஆகிய அனைவரும் எங்களுக்கெதிராகத் திரும்பினர். அதிகாரத்திலிருக்கும் தலித்துகளும், முஸ்லிம் அமைப்புகளும் எங்களை எதிர்த்தனர்.
பாரதீய ஜனதா கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் எங்களை எதிர்த்தார்கள். கேரளாவில் நடந்த ஒரு சிறிய சம்பவத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு, கம்யூனிஸ்ட் கட்சி அரசு 100-க்கும் மேற்பட்ட SDPI அலுவலகங்களை போலீசாரைக் கொண்டு சோதனையிட்டனர். எங்களுடைய தலைவர்கள் மிரட்டப்பட்டாட்கள். எங்களுடைய தொண்டர்கள் மத வெறியர்களான RSS போன்றவர்களால் தாக்கப்பட்டார்கள். ஆனால், இந்த அமைப்பை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை நான் பிரகடனப்படுத்துகிறேன்.

மேடையில் வீற்றிருக்கும் SDPI தலைவர்கள்
அபூபக்கர் கூறினார்: ஆட்சியாளர்களின் வெட்கக்கேடான செயல்களை சுட்டிக்காட்டும் அக்கறை ஒரு சிறிய குழந்தையிடம் இருப்பதைப் போல, நாங்கள் மைய நீரோட்ட அரசியலிலிருந்து விலகியே இருக்கிறோம். இது தான் உரக்கச் சொல்வதற்கான தைரியம், "அதுவல்ல (சரியான) வழி, இது தான் (சரியான) வழி". இதைச் சொல்லும் மக்கள் எல்லா காலங்களிலும் எதிர்க்கப்படுவதையும், மிரட்டப்படுவதையும் வரலாறு நெடுகிலும் காணலாம். ஆனால், வரலாறு படைப்பது அவர்கள் தான். அவர்களின் அரசியல் பிரவேசத்தை எதிர் கொள்ள தைரியமற்றவர்கள், ஒடுக்கப்பட்ட, சித்திரவதைக்குள்ளாக்கப் பட்ட மக்களிலிருந்து உரிமை மீட்க வீறு கொண்டெழும் இளைஞர்களின் உணர்வுகளை மதிக்காமல், அம்மக்களை தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
நாங்கள் அவர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட முடியும். அப்படி கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதால் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதிருக்கும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment
UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM