Thursday, May 19, 2011

தீவிரவாதத் தாக்குதலுக்குத் தேவையான நிதியை அளித்தவர் பிஜேபி MP யோகி ஆதித்யநாத்: பாரத் பய்

இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு தீவிரவாதத் தாக்குதலுக்குத் தேவையான நிதியைத் திரட்டியவர் என நம்பப்படும் பாரத் பய்  என்று அழைக்கப்படும் பாரத் மோகன்லால் ரடேஷ்வர்-ஐ விசாரிக்கப்பட்டதில் பிஜேபி MP யோகி ஆதித்யநாத் போன்ற மூத்த RSS, பிஜேபி தலைவர்கள் தான் குண்டு வைக்கச் சொன்னதும், அதற்குறிய பணத்தையும் அளித்தார்கள் என்று ஒப்புக் கொண்டுள்ளார். தேசிய செய்தித் தொலைக்காட்சிச் சேனலான டைம்ஸ் நௌ-க்கு கிடைக்கப் பெற்ற செய்தியில், அவர் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தில், "நானும், சுனில் ஜோஷியும் யோகி ஆதித்யனாத்தைச் சந்தித்து, அசிமானந்தா (தான்) உங்களிடம் அனுப்பி வைத்தார் என்று கூறினோம். நாங்கள் ஒன்றிணைந்து பல்வேறு தாக்குதல்களை வெற்றிகரமாக முடித்திருக்கிறோம் என்று சுனில் ஜோஷி ஆதித்யனாத்திடம் கூறினார். ஆயுதங்கள், வெடிமருந்துகள், தேவையான நிதியும் கொடுத்து உதவினால், இதை விடச் சிறந்த தாக்குதல்களை நடத்தி முடிப்போம்" என்று கூறியதும், பிறகு வந்து சந்திக்குமாறு ஆதித்யநாத் கூறினார். சில நாட்களுக்குப் பிறகு சுனில் ஜோஷி மீண்டும் ஆதித்யனாத்தைச் சந்தித்து, வெடிமருந்துகளுடன் திரும்பி வந்தார். இதைத்தான் சுனில் ஜோஷி என்னிடம் சொன்னார்".

தன்னுடைய குற்றத்தை மறைக்கும் விதமாக ஒரு நேர்காணலில் ஆதித்யநாத் பேசும்போது, "நான் RSS-ஐச் சேர்ந்தவன். ஆனால், சுனில் ஜோஷி, பாரத் பய் போன்றவர்களை எனக்குத் தெரியாது. என் மீதான விசாரணையை நான் சந்திப்பேன். தகுந்த ஆதாரங்கள் விசாரணை அதிகாரிகளிடம் இருந்தால், எவ்விதமான விசாரணையையும் நான் வரவேற்கிறேன். UPA அரசு புலனாய்வுத் துறையை தவறாகப் பயன்படுத்துகிறது. இவ்வழக்குகளில் இந்தியன் முஜாஹிதீன், சிமி, லஷ்கர் போன்ற அமைப்புகள் ஈடுபடவில்லை என்று இந்த அரசு சான்றளித்துள்ளது. ஆனால், RSS போன்ற அமைப்புகளைக் குறிவைக்கிறது".

"2007-இல் நடத்தப்பட்ட அஜ்மீர் குண்டு வெடிப்பில் சுனில் ஜோஷி தான் மூளையாகச் செயல்பட்டார்" என்று இதற்கு முன்பு அளிக்கப்பட ஒப்புதல் வாக்குமூலத்தில் பாரத் பய் கூறியிருந்தார். "மூத்த RSS தலைவர் இந்த்ரேஷ் குமார் தான் சுனில் ஜோஷியைக் கொலை செய்வதற்கு மூளையாகச் செயல்பட்டார்" என்றும் கூறியிருந்தார். மலேகான், அஜ்மீர், மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புகளை நடத்துவதற்கு ரூபாய் 70,000, ரூபாய் 50,000, ரூபாய்  40 000 போன்ற தொகைகளை பல்வேறு காலகட்டங்களில் பாரத் பய் கொடுத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.  கடந்த பிப்ரவரி 4-ஆந்தேதி குஜராத்திலுள்ள வல்சாத் என்ற இடத்தில் வைத்து பாரத் பய்-ஐ ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்புப் படை கைது செய்தது.

நன்றி: மில்லி கெஜட்

No comments:

Post a Comment

UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM