Sunday, May 22, 2011

ORISSA & KARNATAKA VIOLENCE MASTERMIND IS PUROHIT

ஒரிஸ்ஸா, கர்நாடகா கலவரங்களின் சூத்திரதாரி புரோஹித்: பிரக்யா
Terrorism
சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு சம்பந்தமாக தீவிரவாதி பெண் சாமியார் பிரக்யா சிங்க் தாக்கூரிடம் NIA விசாரித்து வருகிறது. அப்போது ஒரிஸ்ஸா, கர்நாடகா கலவரங்களின் சூத்திரதாரியாக செயல்பட்டவர் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித் என்பவர் தான் என்பதை ஒப்புக்கொண்டார். ராம்ஜி கல்சன்க்ரா என்னுடைய மோட்டார் சைக்கிள்-ஐ பயன்படுத்தி செப்டம்பர் 2008-இல் மலேகான் குண்டு வெடிப்பை நடத்தினார் என்பதையும் மும்பையின் தீவிரவாத எதிர்ப்புப் படை (ATS) இடம் ஒப்புக் கொண்டார்.

தீவிரவாதி சாமியார் பிரக்யா மேலும் கூறுகையில், மலேகான் குண்டு வெடிப்பிற்கு 4 மாதங்களுக்கு முன் ஏப்ரல் 2008-இல் தான் ஸ்ரீகாந்த் புரோஹித்-ஐ நான் முதன் முதலாக சந்தித்தேன். அப்போது எனக்கு எதுவும் தெரியாது. தீவிரவாதி சாமியார் பிரக்யா-வின் கைதுக்குப் பிறகு ஸ்ரீகாந்த் புரோஹித் சதிகாரர்கள் அனைவருக்கும் ஒரு SMS -ஐ அனுப்பினார். அதில் "சிங் சிக்கிக் கொண்டார்" என்று இருந்ததைப் பார்க்கும் போது பிரக்யா சிங்-இன் பங்கு இதில் தெளிவாக வெளிப்படுகிறது எனும் தன்னிடமுள்ள ஆதாரத்தை NIA முன்வைக்கிறது. ஆனால், பிரக்யா சிங் கூறுகையில் ஆசிரமத்திற்குத் தேவைப்படும் பணத்திற்காக புரோஹித் என்னோடு 8 -10 முறை பேசியிருக்கிறார் அவ்வளவு தான் என்று.

பிரக்யாவும், ராம்ஜி கல்சன்க்ராவும் சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் சதிச்செயல் குறித்து பேசியது பற்றி   மார்ச் 23 -இல் வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ்-இல் வெளியான செய்தியாவது:

1. தேவாசைச் சேர்ந்த என்னுடைய ராக்கி சகோதரரான சுனில் ஜோஷி கொடுத்த பணத்தைக் கொண்டு 2003 -இல் சூரத்தில் என்னுடைய மோட்டார் சைக்கிள் (பதிவு எண் GJ 05 BR 1920) வாங்கப்பட்டது. 2004 நவம்பரில் ரூபாய் 22,000-தை சுனில் ஜோஷியிடமிருந்து பெற்றுக் கொண்டு மோட்டார் சைக்கிள்-ஐக் கொடுக்கிறார். ஆனால் சுனில் ஜோஷிக்கு மோட்டார் சைக்கிள்-ஐ விற்கவே இல்லை என்று பிரக்யா கூறுகிறார்.

2. 30 நிமிட சதி ஆலோசனையில் ப்ரக்யா, கல்சன்க்ராவிடம் மோட்டார் சைக்கிள்-ஐப் பற்றி விசாரிக்கிறார். தன்னோடு சூரத்-க்கு வருமாறும் கூறுகிறார். "மகாராஷ்ட்ராவிலுள்ள மலேகானில் வைத்த குண்டு வெடிப்பிற்கு உங்களுடைய வாகனத்தைத் தான் பயன்படுத்தினேன்" என்று கல்சன்க்ரா கூறியதும், "ஏன் அவ்வாறு செய்தாய்?" என்று ப்ரக்யா கேட்டார். "தேவையாகிவிட்டது" என்று கல்சன்க்ரா பதிலளித்தார்.

3. "வாகனம் என்னுடைய பெயரில் இருப்பதால் நான் சிறை செல்ல நேரிடும்" என்று ப்ரக்யா அப்போது கூறினார். அதற்கு ராம்ஜி கல்சன்க்ரா ஆறுதல் கூறினார்: "கவலைப்பட வேண்டாம். நான் நம்பர் ப்ளேட்-ஐ மாற்றிவிட்டேன். எஞ்சின் நம்பரையும், சேசிஸ் நம்பரையும் அறத்தைக் கொண்டு தேய்த்து அளித்துவிட்டேன். எனவே போலீசாருக்கு ஒரு துப்பும் கிடைக்காது" என்று தேற்றினார்.

4. அதனை மறுக்கும் விதமாக ப்ரக்யா, கல்சன்க்ராவிடம்  கூறினார், "போலீஸ் என்னை தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கிறது. எனவே, துப்பு கிடைத்து விட்டது என்பது உறுதியாகிவிட்டது". அப்போது கல்சன்க்ரா கூறினார்: "அப்படி ஒன்றும் நடக்காது. தாக்குதல் நடத்தப்பட்டு விட்டது. தேவை என்றால் என் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்"


மத சார்பற்ற கிறிஸ்துவ அமைப்பு (கிறிஸ்டியன் செகுலர் போரம்) பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ஒரிஸ்ஸாவிலும், கர்நாடகாவிலும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரங்கள் குறித்த விசாரணையை NIA - விடம் ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

நன்றி: மில்லி கெஜட்

No comments:

Post a Comment

UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM