Sunday, May 22, 2011

NIA TO PROBE KANPUR BLAST (KANPUR KUNDU VEDIPPU - NIA VISAARIKKUM)

கான்பூர் குண்டு வெடிப்பு - NIA விசாரிக்கும்
Human Rights
2008 ஆகஸ்ட் 24-ஆந்தேதி கான்பூரில் நடந்த குண்டு வெடிப்பில்  பஜ்ரங் தல்-ஐ சேர்ந்த இரண்டு பேர்  தப்பிக்க முடியாமல் பலியானார்கள். உ.பி-யின் தீவிரவாத எதிர்ப்புப் படை இதுவரை நடத்திய விசாரணையில் குற்றவாளிகளை அடையாளம் காண முடியவில்லை. எனவே புலன் விசாரணையை NIA -க்கு மாற்றப்படுகிறது.
உ.பி.யின் விசாரணை அதிகாரிகளும், NIA -வும் கடந்த  2 மாதங்களாக இவ்விசாரணை குறித்து விவாதித்து இதனை NIA -வினால் மட்டுமே வெற்றிகரமாக துப்பு துலக்க முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். சம்ஜோத்தா  எக்ஸ்பிரஸ்,  மலேகான்,  மொடாசா குண்டு வெடிப்புகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் தான் கான்பூர் குண்டு வெடிப்பிலும் ஈடுபட்டுள்ளனர் என்ற குறிப்பை உள்துறை அமைச்சகத்தாலும், தேசிய புலனாய்வு ஏஜென்சி-யாலும் உ.பி.அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்தும் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
 
நன்றி: MG News Desk

No comments:

Post a Comment

UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM